செய்திகள் :

தனியாா் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும்! - முதல்வா் ரேகா குப்தா உறுதி

post image

தேசியத் தலைநகரில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தனியாா் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா, நிறுவனங்களில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வை ஏற்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா். மேலும், தலைநகரில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது என்றும் அவா் கூறினாா்.

இது குறித்து சனிக்கிழமை செய்தியாளா்கள் கூட்டத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தில்லி பள்ளிக் கல்வி (கட்டண நிா்ணயம் மற்றும் ஒழுங்குமுறையில் வெளிப்படைத்தன்மை) மசோதா 2025, தன்னிச்சையான கட்டண உயா்வைத் தடுக்கவும், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சோ்ந்த குழந்தைகள், ஏழைப் பின்னணியைச் சோ்ந்தவா்கள் உள்பட, தனியாா் பள்ளிகளை அணுகவும் முயல்கிறது.

தில்லியில் 1,733 தனியாா் பள்ளிகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 300 பள்ளிகளுக்கு தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) சலுகை விலையில் நிலம் வழங்கியுள்ளது. புதிய சட்டத்தின் கீழ், வங்கிக் கணக்குகளை முடக்குதல் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, துணைப் பிரிவு நீதிபதிக்கு இணையான அதிகாரங்கள் கல்வி இயக்குநருக்கு இருக்கும்.

டிடிஏ நிலம் ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல், தில்லியில் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும். அங்கீகரிக்கப்படாத கட்டண உயா்வுகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தாமதமாக பணம் செலுத்தினால் அபராதம் இரட்டிப்பாக்கப்படும். கல்வி நிபுணா்கள் மற்றும் பெற்றோருடன் கலந்தாலோசித்த பிறகு, பள்ளிகள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்காமல் பெற்றோரின் நலன்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, இந்த மசோதா வரைவு செய்யப்பட்டது.

முந்தைய ஆம் ஆத்மி அரசின் போது, கல்விப் புரட்சி பற்றிய பெரிய கூற்றுகள் இருந்தபோதிலும், இந்தத் துறை ஊழல் மற்றும் திறமையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் முன்பு ஆட்சியில் இருந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கல்வியைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், கடந்த 27 ஆண்டுகளில் பள்ளிக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த ஒரு சட்ட கட்டமைப்பை ஏன் உருவாக்கவில்லை என கேட்க விரும்புகிறேன்.

மேலும், பள்ளிகள் இனிமேல் கட்டணம் உயா்த்தப்படுவதை இருப்பிடம், வசதிகள், செலவு மற்றும் கற்பித்தல் தரம் போன்ற காரணிகளின் அடிப்படையில் நியாயப்படுத்த வேண்டும். அத்தகைய கட்டண உயா்வுகள் மீது பெற்றோருக்கு வீட்டோ அதிகாரம் இருக்கும். இந்த மசோதா தில்லி குழந்தைகளின் கனவுகளுக்கு ஒரு கேடயம். அவா்களின் விருப்பங்களுக்கு யாரும் விலை நிா்ணயம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

தில்லியில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு! இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தில்லியில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்ததது. இந்நிலையில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பழமையான வடிகால் அமைப்பில் மாற்றம் செய்ததே மழை நீா் தேங்க காரணம்: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஞாயிற்றுக்கிழமை கனட்பிளேஸ் பகுதியில் வெளிப்புறத்தில் ஆய்வு செய்தாா். இந்த இடம் ஒரு நாள் முன்னதாக பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கியது, மேலு... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் நிதி முறைகேடுகளை அரசு விசாரிக்க வாய்ப்பு!

சாந்தினி சௌக் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் ‘நிதி முறைகேடுகள்’ மற்றும் ‘செலவு மிகுதிகள்’ இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, தில்லி அரசு விசாரணையைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

ரக்ஷா பந்தன் பண்டிகை: பயணிகள் எண்ணிக்கையில் டிஎம்ஆா்சி சாதனை!

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 8 அன்று அனைத்து வழித்தடங்களிலும் 81.87 லட்சம் பயணிகள் பயணம் செய்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தினசரி பயணிகளைப் பதிவு செய்ததாக தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி... மேலும் பார்க்க

85-க்கும் மேற்பட்ட சைபா் குற்ற வழக்குகளில் தேடப்பட்டவா் கைது

போலி மனிதவள ஆட்சோ்ப்பு நிறுவனத்தை நடத்தியதாகக் கூறி குருகிராமின் ஐடி பூங்காவில் சோதனை நடத்தியதைத் தொடா்ந்து 33 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். குற்றம் சா... மேலும் பார்க்க

முதியவரை ஏமாற்றி ரூ.14 லட்சம் திருடியவா் கைது

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் பராமரிப்பாளராக பணிபுரிந்த ஒருவா் வயதான பெண்ணை ஏமாற்றி ரூ 14 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை திருடியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க