செய்திகள் :

தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?

post image

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள பேரணிக்கு தில்லி காவல்துறையினரிடம் அனுமதி கோரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு வாக்குத் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சான்றுகளுடன் கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, வாக்குத் திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300 எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இன்று பேரணி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் பேரணிக்கு இதுவரை எவ்வித அனுமதி கோரவில்லை என்று தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளருடன் பேசிய சமாஜவாதி எம்பி ராம்கோபால் யாதவ், ”தில்லியின் தெருக்களில் நடக்க எம்.பி.க்களுக்கு அனுமதி தேவையில்லை. எம்.பி.க்கள் சாலைகளில் பேரணி செல்வதில் ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாக இருந்தால், இந்த அமைப்பே பயனற்றது.” எனத் தெரிவித்துள்ளார்.

permission has not been sought from the Delhi Police for the rally to be led by Rahul Gandhi.

இதையும் படிக்க : தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிய பாஜக: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

குழந்தை பராமரிப்பு மையத்தின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி! குழந்தை உடல் முழுவதும் காயம்!

நொய்டா: குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட குழந்தையை அதன் பராமரிப்பாளர் அடித்தும், தொடையில் கடித்தும், வலியால் குழந்தை கதறி அழும் விடியோ காட்டி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.நொய்டாவில... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் நான்காவது வாரமாக முடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது வாரத்தின் முதல் நாளிலேயே எம்பிக்கள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி கா... மேலும் பார்க்க

எம்.பி.க்களுக்கு 25 மாடிக் குடியிருப்புகளை திறந்துவைத்தார் மோடி!

தில்லி பாபா கரக் சிங் மாா்கில் 184 எம்.பி.க்களுக்கு 25 மாடி புதிய நவீன குடியிருப்புகளை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்துவைத்தார்.4 தொகுப்புகளாக கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளுக்கு கிருஷ்ண... மேலும் பார்க்க

ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்

புது தில்லி: முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் எங்கே என்று கேட்டு, சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ரௌத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்... மேலும் பார்க்க

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலியாகினர். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் யாத்திரைப் பணியை முடித்துவிட்டு ஜம்முவுக்குச் புறப்பட்டு சென்ற மூன்று துணை ஆய்வாளர்கள் லஸ்ஜ... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத... மேலும் பார்க்க