4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!
இந்த சாதனையைச் செய்த முதல் இந்திய சினிமா கூலிதான்!
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் பெரிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் புரமோஷன்களால் இந்தியளவில் பல திரைகளில் கூலி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கம் மற்றும் நாகர்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா என பான் இந்திய மொழிகளுக்கு ஏற்ற நட்சத்திர நடிகர்கள் இணைந்துள்ளதால் பெரிய வணிக வெற்றியை அடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புக் மை ஷோ (book my show) ஆன்லைன் டிக்கெட் தளத்தில் படம் வெளியாவதற்கு 3 நாள்களுக்கு முன்பாகவே கூலி திரைப்படத்திற்கு 10 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது திரைத்துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு வழியில் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு டிக்கெட்கள் விற்பனையானது இந்தியாவிலேயே இதுவே முதல்முறை என்கின்றனர். இதனால், கூலி வெளியாவதற்கு முன் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது!
இதையும் படிக்க: கலக்குறோம்! அனிருத் உடனான புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ்!