தடைகளை நீக்கி திருமண வரம் அருளும் சுயம்வர பார்வதி ஹோமம்! விஜயவாடா எடுபுகல்லு காம...
அதிரடி... ஆக்சன்... மதராஸி மேக்கிங் விடியோ!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 23-வது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர். முழுக்கவே ஆக்சன் பின்னணியில் உருவான கதையாகத் தெரிகிறது.