செய்திகள் :

திரைப்படம் போல ஒளிபரப்பாகும் சீரியல்!

post image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரு தொடர்கள் திரைப்படம் போன்று இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகின்றன.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஆக. 10) அண்ணா தொடர் இரண்டு மணிநேரம் தொடர்ந்து ஒளிபரப்பானது. இதேபோன்று திங்கள் கிழமையான இன்று (ஆக. 11) வீரா தொடர் இரண்டரை மணிநேரம் ஒளிபரப்பாகவுள்ளது.

இரு தொடர்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், மேலும் ரசிகர்களைக் கவரும் வகையில் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒளிபரப்பப்படுகின்றன.

தொடர்களின் கதைக்களமும் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளதால், திரைப்படம் போன்று இரு தொடர்களும் ஒளிபரப்ப்படுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு அண்ணா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், மிர்ச்சி செந்தில் நாயகனாகவும், நித்யா ராம் நாயகியாகவும் நடிக்கின்றனர். தூத்துக்குடியை பின்னணி களமாக வைத்துள்ளதால் வட்டார மொழி வழக்கில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இதேபோன்று, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு வீரா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் வைஷ்ணவி நாயகியாகவும், அருண் நாயகனாகவும் நடிக்கின்றனர்.

இந்த இரு தொடர்களும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், குறிப்பிடத்தகுந்த டிஆர்பி பெறுவதால், மேலும் ரசிகர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக இந்த வாரம் ஒளிபரப்பாகின்றன.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணி முதல் இரவு 7 மணி வரை அண்ணா தொடரும், திங்கள் கிழமை இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை வீரா தொடரும் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகின்றன.

இதையும் படிக்க | எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து விலகிய கனிகா.... காரணம் என்ன?

Anna and veera serials on Zee Tamil TV air for over two hours, like a movie.

தயாரிப்பாளராகும் சூரி?

நடிகர் சூரி புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாம... மேலும் பார்க்க

கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய தொடர்கள்! இந்த வார டிஆர்பி பட்டியல்!

முன்னணி தொடர்களாக உள்ள கயல், எதிர்நீச்சல் -2 ஆகிய இரு தொடர்களை பின்னுக்குத்தள்ளி சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு ஆகிய தொடர்கள் முதலிடம் பிடித்துள்ளன. சின்ன திரைக்கான டிஆர்பி பட்டியலில், கயல் தொடரும் எ... மேலும் பார்க்க

தனுஷுடன் காதலா? மிருணாள் தாக்கூர் பதில்!

நடிகர் தனுஷுடான காதல் வதந்தி குறித்து மிருணாள் தாக்கூர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அடுத்தடுத்து அதிக திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இட்லி கடை, தேரே இஸ்க் ... மேலும் பார்க்க

கூலியால் வார் - 2 படத்துக்கு சிக்கல்?

கூலி திரைப்படத்தால் வார் - 2 திரைப்படம் சிக்கலைச் சந்தித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாரான கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ப... மேலும் பார்க்க

மாறுபட்ட கதையில் ஆல்யா மானசா: பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ!

ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.ராஜா ராணி தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை ஆல்யா மானசா. இவர் நடிகை மட்டுமல்ல, நடனக் க... மேலும் பார்க்க

அதிரடி... ஆக்சன்... மதராஸி மேக்கிங் விடியோ!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிட்டுள்ளனர்.... மேலும் பார்க்க