இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!
கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய தொடர்கள்! இந்த வார டிஆர்பி பட்டியல்!
முன்னணி தொடர்களாக உள்ள கயல், எதிர்நீச்சல் -2 ஆகிய இரு தொடர்களை பின்னுக்குத்தள்ளி சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு ஆகிய தொடர்கள் முதலிடம் பிடித்துள்ளன.
சின்ன திரைக்கான டிஆர்பி பட்டியலில், கயல் தொடரும் எதிர்நீச்சல் தொடரும் மாறி மாறி முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த இரு தொடர்களும் பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளன.
சின்ன திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், முதல் 6 இடங்களையுமே சன் தொலைக்காட்சியின் தொடர்கள் பிடித்துள்ளன. இவற்றுக்கு அடுத்தபடியாக விஜய் தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளன.
முதலிடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. இந்தத் தொடரில் மணீஷா மகேஷ், அமல்ஜித் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். மக்களிடம் கிடைத்த வரவேற்பால், இந்தத் தொடர் 11.27 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
2வது இடத்தில் கயல் தொடர் உள்ளது. இந்தத் தொடரில் ஸ்வாதி கொண்டே - நியாஸ் கான் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 10.70 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
3வது இடத்தில் கயல் தொடர் உள்ளது. சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் கார்த்திக் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்தொடர், 9.33 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
4வது இடத்தில் எதிர்நீச்சல் - 2 தொடர் உள்ளது. திருமுருகன் இயக்கும் இத்தொடரில் பார்வதி, கனிகா, ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
5வது இடத்தில் அன்னம் தொடர் உள்ளது. இத்தொடரில் அபி நக்ஷத்ரா நாயகியாகவும் கார்த்திக் நாயகனாகவும் நடிக்கின்றனர். இத்தொடர், 8.65 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
6வது இடத்தில் மருமகள் தொடர் உள்ளது. இந்தத் தொடரில் கேப்ரியல்லா - ராகுல் ரவி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 8.51 புள்ளிகளிப் பெற்றுள்ளது.
7வது இடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இத்தொடரில் கோமதி பிரியா நாயகியாகவும், வெற்றி வசந்த் நாயகனாகவும் நடிக்கின்றனர். இத்தொடர் 8.04 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
8வது இடத்தில் அய்யனார் துணை தொடர் உள்ளது. இத்தொடரும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகிறது. எதிர்நீச்சல் புகழ் மதுமிதா நாயகியாகவும் அருண் கார்த்தி நாயகனாகவும் நடிக்கின்றனர். இத்தொடர் 6.89 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
9வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் உள்ளது. இத்தொடரில் ஸ்டாலின், நிரோஷா, சரண்யா துராடி, வெங்கட் ரங்கநாதன், விஜே கதிர்வேல், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஆர்பி பட்டியலில் 6.64 புள்ளிகளை இந்தத் தொடர் பெற்றுள்ளது.
10வது இடத்தில் ராமாயணம் உள்ளது. ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான தொடர், மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகிறது. இதில் ராமனாக சுனில் லெஹரியும், சீதையாக தீபிகா சிகிலாவும் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க | திரைப்படம் போல ஒளிபரப்பாகும் சீரியல்!