செய்திகள் :

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் `எழுத்தாளர் மேடை'; படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சி!

post image

மதுரை நகரில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை ஈர்த்திருக்கிறது `கலைஞர் நூற்றாண்டு நூலகம்'.

மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 2010-ல் சென்னையில், `அண்ணா நூற்றாண்டு நூலகம்' தமிழக அரசால் திறக்கப்பட்டது.

அதேபோல, கடந்த 2023-ல் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், மதுரையில் `கலைஞர் நூற்றாண்டு நூலகம்' அரசால் திறக்கப்பட்டது.

3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்நூலகத்தை 2023 ஜூலை 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்

இந்நூலகத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கிறது.

குழந்தைகளுக்கான பிரிவு, போட்டித் தேர்வு நூல்கள் பிரிவு, ஆங்கிலப் பிரிவு, தமிழ் பிரிவு, கலைஞர் பிரிவு, ஆங்கில குறிப்புதவி நூல்கள் பிரிவு என 6 தளங்களும், ஆய்வாளர் அரங்கம், செஸ் அரங்கம், பார்வை மற்றுத் திறனாலிகளுக்கான சதுரங்க பயிற்சி மையம் உள்ளிட்ட அரங்குகளும் உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் இங்கு வந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களில், சுமார் ஒன்றரை லட்சம் பேர் குழந்தைகள், 27,000 பேர் கல்லூரி மாணவர்கள்.

அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் இங்கு வந்து நேரத்தைச் செலவிடுகின்றனர்.

அனைவருக்கும் வாசிப்பை மேம்படுத்தும் வழிமுறைகள், புத்தகத் தேர்வுகள், அறிவை விரிவாக்கும் நடைமுறைகள் பற்றிய சிறப்பு அமர்வுகளும் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், `எழுத்தாளர் மேடை' என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி இந்நூலகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.

எந்த வயது எழுத்தாளராக இருந்தாலும், தங்களின் படைப்புகளை மதுரை மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், வெளியிடப்படாத தங்களின் படைப்புகளையும் நேரடியாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்

இந்நூலகம் பற்றி நம்மிடம் பேசிய தலைமை நூலகர் தினேஷ்குமார், "வாரந்தோறும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், வாசிப்பு ஊக்குவிப்பு பணிகள், விவாதங்கள், பயிற்சிகள், திரையிடல்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவை குழந்தைகளை வாசிப்பு பழக்கத்திற்கு ஈர்க்கின்றன.

மதுரையின் கலைஞர் நூற்றாண்டு நூலகம், இன்று கல்வி மையமாகவும் அறிவுப்பரிமாற்ற ஒரு மையமாகவும் திகழ்கிறது.

இது வெறும் வாசிப்பை மட்டுமல்லாது, அறிவைப் பகிரும், அனைவரையும் இணைக்கும், நகரின் முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது" என்று கூறினார்.

அவரைத்தொடர்ந்து, அங்கு வந்திருந்த பெற்றோர்களிடமும் குழந்தைகளிடமும் பேசுகையில், "வார கடைசினா குழந்தைகளை இங்க கூட்டிட்டு வந்துருவோம்.

குழந்தைகளை இந்த மாதிரி புக்ஸ் படிக்க வைக்கிறதும், அறிவியல்பூர்வமான விஷயங்களை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி பார்க்கக்கூடிய லேப்ல டைம் ஸ்பென்ட் பண்ண வைக்கிறதும் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

முக்கியமாக, குழந்தைகளுக்கு இதனால மொபைல், டிவி ஸ்கிரீன் டைம் கம்மி பண்ண முடியுது ” என்றனர் தன் குழந்தையுடன் வந்திருந்த பெற்றோர் கதிர், வனிதா.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்

அதேபோல், ஆறாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ், ருத்ரா, குகன் ஆகிய மாணவர்கள், "இங்க பேட்மேன் காமிக் புக்ஸ் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

இங்க, பொம்ம படம் போட்ட எல்லா புக்ஸ் நாங்க படிச்சிட்டு போவோம். எங்களுக்கு இங்க ரொம்ப ஜாலியா இருக்கு” என்று விளையாடிக்கொண்டே நம்மிடம் கூறுகிறார்கள்.

`அதிகரித்த பதற்றம்; தடுப்புகளை தாண்டிய அகிலேஷ்’ - ராகுல் தலைமையில் அதிர வைத்த பேரணி | Spot Report

பீகார் மாநிலத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகள் ப... மேலும் பார்க்க

Paridhabangal: "கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவது சமூக தீண்டாமை" - சீமான் காட்டம்

நாம் கட்சி தலைவர் சீமான் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "விஜய் வருகை... மேலும் பார்க்க

SIR: `தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டம்' - தடுப்பை தாண்டிய அகிலேஷ்; ராகுல் காந்தி கைது!

2024 மக்களவைத் தேர்தலின் போது ஆளும் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தின் பெரும் ஆதரவுடன் "வாக்கு திருட்டு" செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்கின்றனர். மேலும், பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடை... மேலும் பார்க்க

SIR: ``தோளோடு தோள் நிற்கிறோம்..." - இந்தியா கூட்டணியின் ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம், முறைகேடான வாக்காளர் பட்டியல், தேர்தலின்போது வாக்குத் திருட்டு என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள... மேலும் பார்க்க

கீழடி: "சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்" - அமர்நாத் ராமகிருஷ்ணா பேச்சு

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சிந்தனை பேரவை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு ... மேலும் பார்க்க

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலினின் உடுமலைப்பேட்டை பயணம்; நலத்திட்ட உதவிகள் வழங்கினார் | Photo Album

நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம்... மேலும் பார்க்க