செய்திகள் :

SIR: `தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டம்' - தடுப்பை தாண்டிய அகிலேஷ்; ராகுல் காந்தி கைது!

post image

2024 மக்களவைத் தேர்தலின் போது ஆளும் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தின் பெரும் ஆதரவுடன் "வாக்கு திருட்டு" செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்கின்றனர். மேலும், பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தியும், நம்பிக்கையின்மையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலை எதிர்த்து இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, என்.சி.பி. எஸ்.சி.பி. தலைவர் சரத் பவார், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி-கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். இந்தப் போராட்டப் பேரணியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை தடுப்புகளை வைத்து தடுத்தது. அப்போது உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் காவல்துறையின் தடுப்பின் மீது ஏறிகுதித்து போராட்டத்தைத் தொடர்ந்தார்.

அப்போது, `` எங்களைத் தடுக்க காவல்துறையைப் பயன்படுத்துகிறார்கள். நமது ஜனநாயகம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உ.பி.யில், 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போதுகூட வாக்குகள் திருடப்பட்டது மட்டுமல்லாமல், வாக்குச் சாவடிகளும் கைப்பற்றப்பட்டன. மாநில அரசின் உத்தரவின் பேரில் பணியாற்றிய அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் உசேன், ``தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இங்கு பேரணியாகச் செல்கிறோம். ஆனால், எம்.பி.க்களை காவல்துறை கைது செய்கிறது. தேர்தல் ஆணையத்தை சந்திக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது." என்றார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணிக்கு அனுமதி கோரவில்லை என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி-கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் வாகன ஜன்னல் வழியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ``உண்மை என்னவென்றால், அவர்களால் பேச முடியாது. உண்மை நாட்டின் முன் உள்ளது. இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. இந்தப் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. இந்தப் போராட்டம் ஒரு மனிதன், ஒரு வாக்குக்கானது. எங்களுக்கு சுத்தமான, சரியான வாக்காளர் பட்டியல் வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் `எழுத்தாளர் மேடை'; படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சி!

மதுரை நகரில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை ஈர்த்திருக்கிறது `கலைஞர் நூற்றாண்டு நூலகம்'.மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 2010... மேலும் பார்க்க

Paridhabangal: "கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவது சமூக தீண்டாமை" - சீமான் காட்டம்

நாம் கட்சி தலைவர் சீமான் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "விஜய் வருகை... மேலும் பார்க்க

SIR: ``தோளோடு தோள் நிற்கிறோம்..." - இந்தியா கூட்டணியின் ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம், முறைகேடான வாக்காளர் பட்டியல், தேர்தலின்போது வாக்குத் திருட்டு என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள... மேலும் பார்க்க

கீழடி: "சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்" - அமர்நாத் ராமகிருஷ்ணா பேச்சு

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சிந்தனை பேரவை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு ... மேலும் பார்க்க

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலினின் உடுமலைப்பேட்டை பயணம்; நலத்திட்ட உதவிகள் வழங்கினார் | Photo Album

நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம்... மேலும் பார்க்க

'சாதிய ஆதிக்க திமிரோடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகிறார்!' - போராட்டக்குழு கடும் குற்றச்சாட்டு

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 11 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையின் மண்டலங்கள் 5, 6 இரண்டையும் தனியார்மயப்படுத்... மேலும் பார்க்க