இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!
சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித்தட விவரம்!
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன மின்சார பேருந்து சேவை இன்று(ஆக. 11) தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட மின்சார பேருந்து பணிமனையை இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் உள்பட 135 தாழ்தள மின்சார பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார்.

இந்த நிலையில், பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து முதல்கட்டமாக இயக்கப்படும் 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகளின் வழித்தடங்கள் தொடர்பான விவரத்தை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
ஏசி மின்சார பேருந்து செல்லும் வழித்தட விவரம்
தடம் எண் MAA2 என்ற பேருந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறுசேரி ஐடி பூங்கா வரை செல்லும்.
இந்தப் பேருந்து பல்லாவரம் புதிய மேம்பாலம், வேல்ஸ் பல்கலைக்கழகம், ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குமரன் நகர், செம்மஞ்சேரி ஆலமரம், நாவலூர், சிப்காட் வழியாக இயக்கப்படும்.
தடம் எண் 95X என்ற பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் வரை இயக்கப்படும்.
இந்தப் பேருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா, வண்டலூர் கேட், பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம் கிழக்கு, கான்வென்ட், பல்லவன் நகர், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், காரப்பாக்கம், துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எஸ்.ஆர்.பி டூல்ஸ் வழியாக இயக்கப்படும்.
தடம் எண் 555S என்ற பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை இயக்க்கப்படும்.
இந்தப் பேருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா, வெங்கம்பாக்கம், கண்டிகை, மாம்பாக்கம், புதுபாக்கம், சாமியார் பண்ணை, கேளம்பாக்கம் சாலை சந்திப்பு, இந்துஸ்தான் கல்லூரி, நாவலூர், செம்மஞ்சேரி, குமரன் நகர் வழியாக இயக்கப்படும்.
தடம் எண் 19 என்ற பேருந்து தியாகராய நகரில் இருந்து திருப்போரூர் வரை இயக்கப்படும்.
இந்தப் பேருந்து சைதாப்பேட்டை, எஸ்.ஆர்.பி. டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி, கேளம்பாக்கம், கோமான் நகர் சாலை சந்திப்பு வழியாக இயக்கப்படும்.
தடம் எண் 102 என்ற பேருந்து பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் வரை இயக்கப்படும்.
இந்தப் பேருந்து தலைமைச் செயலகம், சேப்பாக்கம், ராணி மேரி கல்லூரி, ஏ.எம்.எஸ். மருத்துவமனை, அடையார் பி.டி. இந்திரா நகர், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி வழியாக இயக்கப்படும்.
தடம் எண் 570/570S என்ற பேருந்து கோயம்பேட்டில் இருந்து கேளம்பாக்கம் / சிறுசேரி ஐடி பூங்கா வரை இயக்கப்படும்.
இந்தப் பேருந்து எம்.எம்.டி.ஏ. காலனி, வடபழனி, அசோக் பில்லர், காசி தியேட்டர், ஈக்காடுதாங்கல், கிண்டி தொ.பே, கான்கோட் / வேளச்சேரி (Check Post), குருநானக் கல்லூரி, வேளச்சேரி, எஸ்.ஆர்.பி. டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர் (570: இந்துஸ்தான் கல்லூரி / 570S: சிப்காட்) வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!