செய்திகள் :

பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! ராகுல்

post image

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.

பாஜக அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டியில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை வெளியிட்ட கர்நாடக மாநில தேர்தல் அலுவலர், வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு ராகுலுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, குற்றச்சாட்டு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மீண்டும் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றதற்காக ராகுல் காந்தி இன்று கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,

நான் வெளியிட்டது தேர்தல் ஆணையத்தின் தரவுகள். பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிப்பதற்கு என்னுடைய தரவுகளை நான் வெளியிடவில்லை.

தரவுகளை ஆணையத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் அவர்களுக்கே தெரியும். இதெல்லாம், பிரச்னையை திசைதிருப்புவதற்கான வேலை. பெங்களூரில் மட்டுமல்ல பல தொகுதிகளிலும் இதுதான் நடந்துள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு அவர்களின் தரவுகள் அம்பலப்படுத்தப்படும் என்பது தெரியும். அவர்கள் மறைக்க நினைப்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

LoP Rahul Gandhi has responded to the Election Commission of India's request to file an affidavit in the vote rigging case.

இதையும் படிக்க : ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

தூக்கத்தில் கொன்றுவிடு! ஆபத்தான ரகசியங்களை கடத்தும் செய்யறிவு! மனித குலத்துக்கு அழிவா?

செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற தலைப்புல் நடத்தப்பட்ட ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் தெரு நாய்களால் ரேபீஸ் நோயால் பாதி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15... மேலும் பார்க்க