ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!
ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர்.
தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அன்றைதினம் இரவு 10.05 மணிக்கு ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானம் தரையிறங்கியதும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்படவில்லை.
இரவு 11.00 மணி வரை விமானத்திற்குள் பயணிகள் அடைத்து வைக்கப்பட்டனர். கேபின் குழுவினர் தெளிவான எந்த விளக்கமும் அளிக்காததால் அதில் இருந்தவர்கள் சற்று பதற்றத்துடன் இருந்துள்ளனர்.
பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை என்று விமான நிறுவன ஊழியர்கள் தாமதமாக விளக்கமளித்துள்ளர்.
இந்த நாடு, 2025க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும்! எலான் மஸ்க் எச்சரிக்கை
நிலைமை சரியானவுடன் அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக இறங்கினர். இந்த சம்பவத்தின்போது எந்த காயங்களும் அல்லது மருத்துவ அவசரநிலைகளும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இருப்பினும் இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் திங்கள்கிழமை பிற்பகல் வரை எந்த முறையான அறிக்கையும் வெளியிடவில்லை.