மானநஷ்ட ஈடு வழக்கு! தோனி வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையர் நியமனம்!!
Jana Nayagan:``அவ்வளவு பெரிய நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறார்" - விஜய் குறித்து நடிகர் பாபி தியோல்
ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜனநாயகன்’. அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு எனப் பலர் நடித்துள்ளனர்.
முழு நேர அரசியலில் ஈடுபடும் நடிகர் விஜய்யின் கடைசி படம் இது என்றும் பேசப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பாலி தியோல் நடித்திருக்கிறார்.
விஜய்யின் கடைசிப்படம்
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பாபி தியோல் பேட்டியளித்திருக்கிறார். அதில், ``நான் தளபதி விஜய்யுடன் ஒரு படம் நடித்திருக்கிறேன். இது பொங்கலுக்கு வெளியாகும். அவர் அரசியலில் தீவிரமாகியிருப்பதால் ஜனநாயகன் அவரின் கடைசிப்படம் எனக் கூறுகிறார்கள்.
அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆரம்பத்தில் எங்கு படப்பிடிப்பு நடக்கும் எனப் படக்குழுவிடம் கேட்டபோது, சாலைகளிலோ, வெளியிலோ படப்பிடிப்பு நடத்தினால் மக்கள் நடிகர் விஜய்யைப் பார்க்க கூடிவிடுவார்கள்.
சூர்யாவுடன் இணைந்து ஒரு படம்
அதனால் நம்மால் ஒருவேளையையும் செய்ய முடியாது. எனவே எல்லாவற்றுக்கும் செட்தான் போடுவோம் என்றார்கள். அவர் அவ்வளவு பெரிய நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறார். இப்படி எல்லோருடைய பெயருக்குப் பின்னாலும் ஒன்று இருக்கிறது. நான் கங்குவா படத்தில் நடித்தேன், அது சரியாக வெற்றிப்பெறவில்லை. இருப்பினும், நான் மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் செய்ய விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த நடிகர்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...