Coolie: "நாம் ஒன்றாகப் பயணித்த நீண்ட பயணம் இது" - எடிட்டர் பிலோமின் ராஜ் குறித்த...
Indra: "இந்த விஷயத்தில் ரஜினி சாரை விட சுனில் சார் ஒரு ஸ்டெப் மேல" - வசந்த் ரவி
சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இந்திரா.
திரில்லர் படமான 'இந்திரா' ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசைவெளியீடு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) நடைபெற்றது.
இநிகழ்ச்சியில் பேசிய வசந்த் ரவி, "'இந்திரா' படம் ஒவ்வொரு நொடியும் உங்களை மகிழ்விக்கும். என் படம் என்பதால் சொல்லவில்லை, உண்மையிலேயே மிக வித்தியாசமான படம்.

சபரீஷ் கதை சொன்ன நொடியிலிருந்து படம் முடித்தது வரும் வரை, படத்தில் உழைத்த அனைவரும் ஒரே உணர்விலிருந்தோம். படம் மிக அழகாக வந்துள்ளது.
மெஹ்ரீன் நிறையத் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். இந்த கேரக்டர் அழுத்தமானது எப்படிச் செய்வார் என்று நினைத்தோம். ஆனால் மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்.
சுனில் சார் பற்றிச் சொல்ல தேவையில்லை. அவர் தெலுங்கில் பண்ணாத கதாபாத்திரமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும்.
இதுவரைக்கும் ரஜினி சார்தான் ரொம்ப ஹம்பிளான நபர் என நினைத்தேன். நிறையச் சாதித்திருந்தாலும் அவர் ஹம்பிள்ளாகத்தான் இருப்பார்.
ஆனால் அவரை விட ஒரு ஸ்டெப் ஹம்பிளாக இருக்க முடியும் என்றால் அது சுனில் சார்தான். அவர் மாதிரி ஒரு ஹம்பிளான மனிதரைப் பார்க்கவே முடியாது. அதேபோல அவர் மாதிரி இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை யாராலும் நடித்திருக்க முடியாது.

என் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்க வேண்டும் என நினைத்துதான் செய்கிறேன்.
தரமணி, ராக்கி, ஜெயிலர் மாதிரி இந்திரா முக்கியமான படமாக இருக்கும். இது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரில்லராக இருக்கும்.
கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், எல்லோரும் தியேட்டரில் வந்து படத்தை பாருங்கள் நன்றி” என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...