திண்டுக்கல்: '112 அடி கிணற்றைக் காணவில்லை'- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
நோயாளியுடன் டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்; ஓடி ஓடி உதவிய போலீஸ்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
கேரள மாநிலம் திருச்சூர் மகளிர் காவல் நிலையத்தில் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருப்பவர் அபர்ணா லவகுமார். திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஒரு நோயாளிக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதற்காக ஜூபிலி மெடிக்கல் காலேஜிக்கு சீரியஸான நிலையில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார்.
கோலோத்தும்பாடம் ரோட்டில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ரோட்டில் வரிசையாக நின்றதால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. அப்போது போலீஸ் ஜீப்பில் ரோந்து சென்றுகொண்டிருந்த அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் அபர்ணா லவகுமார் உடனே வாகனத்தில் இருந்து இறங்கி, சுமார் நூறு மீட்டர் தொலைவில் வேகமாக ஓடிச் சென்று முன் பகுதியில் நெரிசலில் சிக்கியிருந்த வாகனங்களைச் சீரமைத்து ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
போலீஸ் அதிகாரி அபர்ணா லவகுமார் வேகமாக ஓடியபடியே வாகனங்களை ஒழுங்குபடுத்திய காட்சியை ஆம்புலன்சில் டிரைவர் அருகே இருந்த மருத்துவ உதவியாளர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

போலீஸ் அதிகாரி அபர்ணா லவகுமார் நோயாளிகள் பலருக்கு ஏற்கனவே உதவிகளைச் செய்து கவனம் பெற்றவர் ஆவார். மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இறந்த நபருக்குச் சிகிச்சைக்கான பில் தொகை செலுத்துவதற்காக தனது கையில் கிடந்த தங்க வளையலைக் கொடுத்து உதவி செய்தார்.
கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக தனது நீளமான தலைமுடிகளை தானமாக வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார். இந்த நிலையில்தான் ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நோயாளியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேகமாக ஓடிச் சென்று உதவியதால் வீடியோ மூலம் வைரலாகி உள்ளார்.

ஒரு போலீஸ் அதிகாரி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அபர்ணா லவகுமார் செயல்பட்டுவருவதாக நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வைரல் வீடியோவைப் பகிர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் அபர்ணா லவகுமார் கூறுகையில், "அந்த இடத்தில் காவல்துறையைச் சேர்ந்த யார் இருந்தாலும் இதுபோன்றுதான் செய்திருப்பார்கள். அதைத்தான் நானும் செய்தேன். அப்படித்தான் எங்களால் செயல்பட முடியும்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...