செய்திகள் :

Rajinikanth: மகளுடன் விமானத்தில் பயணித்த ரஜினிகாந்த்; உற்சாகத்தில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

post image

கூலி படத்தின் வெளியீடு நெருங்கி வருகிறது. நடைபெற்று வரும் புரொமோஷன் பணிகளே ஊரெங்கும் ரஜினிகாந்த் ஃபீவரைப் பரப்பி வருகின்றன. இதற்கிடையில் ஒரு கேஷுவலான விமான பயணத்தில் வைரலாகியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினிகாந்த் தனது மகளுடன் எகானமி வகுப்பில் பயணிக்கும் வீடியோ ஒன்று இன்று (ஆகஸ்ட் 7) வெளியானது.

Rajinikanth Viral Video

அந்த வீடியோவில் , எகானமி வகுப்பில் முதல் இருக்கையில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஒன்றாக அமர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

பின்னிருக்கையில் இருந்த ரசிகர் ஒருவர், "தலைவா face பாக்கணும்" எனக் கேட்வே எழுந்து அனைவருக்கும் கையசைத்தார். விமானத்தில் இருந்த பலரும் ஆர்ப்பரித்தனர். சிலர் வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர்.

பலரும் அவரது முகத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் எழுந்து நிற்பதைக் காண முடிகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

கூலி
கூலி

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இந்த படத்தில், நாகார்ஜுனா அக்கினேனி, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உப்பேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெய்லர் 2 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்லர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப் குமார் மற்றும் ரஜினிகாந்த் இணையும் இந்த படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளது.

அயர்லாந்து: ``இந்தியாவுக்கு திரும்பிப் போ'' - சிறுமியை தாக்கிய சிறுவர் கும்பல்; என்ன நடந்தது?

அயர்லாந்தில் கடந்த 8 ஆண்டுகளாக செவிலியர் பணி செய்து வரும் பெண் தன் 2 குழந்தைகள், கணவருடன் அங்கு வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் அயர்லாந்தின் குடிமக்களாக குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: `புறாக்களுக்கு தீனி போட தடை' - தடுப்பை அகற்றி போராட்டத்தில் குதித்த ஜெயின் மக்கள்

மும்பையில் புறாக்களுக்கு தீனி போட மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்பிரச்னை இப்போது போராட்டமாக மாறியுள்ளது. மும்பையில் முக்கிய... மேலும் பார்க்க

AK : நடிகர் அஜித்துடன் இணையும் ரேஸர் நரேன் கார்த்திகேயன்! - நம்ம நரேனை நினைவிருக்கிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். குட் பேட் அக்லி படம் வெளியானதற்குப் பிறகு முழுவதும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு தடை: புறாக்களுக்கு தீனி போடும் மும்பை மாநகராட்சி; மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மும்பை முழுவதும் புறாக்களுக்கு தீனி போடுவதற்கு பிரத்யேக இடங்கள் இருக்கிறது. இந்த இடங்களில் பொதுமக்கள் மற்றும் குஜராத் வியாபாரிகள் புறாக்களுக்கு தானியங்களை உணவாக கொடுத்து வந்தனர். இதற்காக புறாக்கள் கூட... மேலும் பார்க்க

லண்டன் தெருக்களில் 'பான் மசாலா' கறைகள்; பரவும் வீடியோ - இந்தியர்கள் மீது அதிருப்தி!

லண்டன் தெருக்களில் குப்பைத் தொட்டிகள், தூண்கள் மற்றும் மரங்கள் இருக்கும் பகுதிகளெல்லாம் கருஞ்சிவப்பு வண்ணம் பூசியதுபோல பான் மசாலா எச்சில் கறைகளோடு தோற்றமளிக்கும் வீடியோ இணையத்தில் விவாதத்தைக் கிளப்பிய... மேலும் பார்க்க

மும்பை: `புறாக்களுக்கு உணவளித்தால் அபராதம், வழக்கு' - போராட்டத்தில் குதித்த மக்கள்; என்ன காரணம்?

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவு மும்பையில் பல இடங்களில் புறாக்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் இருக்கிறது. குறிப்பாக கேட்வே ஆப் இந்தியா, தாதர், மாட்டுங்கா என முக்கியமான இடங்களில் இந்த கபூத்... மேலும் பார்க்க