செய்திகள் :

`ஆபாச காட்சிகள்' - ஸ்வேதா மேனன் மீது FIR பதிவு; நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்த ஐகோர்ட்

post image

மலையாள சினிமா நடிகை ஸ்வேதா மேனன் ஆபாச காட்சிகளில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுகுறித்து மார்ட்டின் மேனாச்சேரி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை போலீஸார் ஏற்க மறுத்ததை அடுத்து எர்ணாகுளம் சி.ஜே.எம் கோர்ட்டில் இதுகுறித்து மனு அளித்திருந்தார்.

இதற்கிடையே ஸ்வேதா மேனன் சில ஆண்டுகளுக்கு முன் நடித்த சினிமாக்களின் சில ஆபாச காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகியின. இந்த நிலையில் ஸ்வேதா மேனோன் மீது வழக்குப்பதிவு செய்ய எர்ணாகுளம் சி.ஜே.எம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

கேரள உயர்நீதிமன்றம்

அதன் அடிப்படையில் கொச்சி சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஐ.டி ஆக்ட் படியும், ஒழுக்ககேடான நடைமுறைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பின் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடும் நிலையில்,  வரும் 15-ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அவருக்கு எதிராக நடிகர் தேவன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து நடிகை ஸ்வேதா மேனன் ஐகோர்ட்டை நாடினார். கேரளா ஐகோர்ட்டில் நடிகை ஸ்வேதா மேனன் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:

மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பின் தேர்தலில் தலைவர் வேட்பாளராக போட்டியிடுவதால் தான் தனக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமா நடிகர் சங்க சரித்திரத்தில் முதல் முதலாக பெண் தலைவர் ஆகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தே, என்னை அவமானப்படுத்தும் நோக்கில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்ட செயல் முறையை தவறாக பயன்படுத்துவதற்காக இந்த வழக்கை போட்டுள்ளனர்.

புகார் மனுதாரரின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை மற்றும் தீங்கு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். நான் நடித்த சினிமாக்கள் எல்லாம் சென்சார் போர்டு அங்கீகரித்தவை. எனவே இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.

என ஸ்வேதா மேனன் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகை ஸ்வேதா மேனன்

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், ஸ்வேதா மேனன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது. மேகும், இந்த வழக்கு குறித்து புகார்தாரரிடமும், போலீஸாரிடமும் விளக்கம் கேட்டது ஐகோர்ட். மேலும், எர்ணாகுளம் சி.ஜே.எம் நீதிமன்றத்திடம் ஐகோர்ட் அறிக்கை கேட்டுள்ளது. இதற்கிடையே மலையாள சினிமா பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நடிகை ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டூவிலரில் வீடியோ எடுத்துக் கொண்டே 25 தெருநாய்களை சுட்டுக்கொன்ற நபர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் தெருநாய்களை மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற படி வீடியோ எடுத்துக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க... மேலும் பார்க்க

`ரூ.1 கோடி கொடுக்காவிட்டால் சாகும் வரை சிறை'- காதலனை மிரட்டிய மும்பை வங்கி பெண் அதிகாரி கைது!

மும்பையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் டோல்லி கோடக். இவர் தனது சகோதரன் மற்றும் தன்னுடன் பணியாற்றிய வங்கி ஊழியர்களின் துணையோடு தனது காதலனை மிரட்டி ஒரு கோடி பணம் கேட்டுள்ளார். டோல்லி கோடக்க... மேலும் பார்க்க

ஊட்டி: ஹோட்டல் குளியலறை சுவரில் ஃபிளாஷ் லைட்; பதறிய பெண்; விசாரணையில் பகீர் தகவல்; என்ன நடந்தது?

ஊட்டியில் கோடை‌ சீசன் நிறைவடைந்திருந்தாலும், தற்போது நிலவி வரும் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கேரளா மாநிலத்தைச்‌‌ சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந... மேலும் பார்க்க

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை வழக்கு: முக்கியக் குற்றவாளி என்கவுன்டர்; இருவர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய கர்நாடக இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலை விரித்து 26 பவுன் நகைகளை அபகரித்துச் சென்ற லிபின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர... மேலும் பார்க்க

திருப்பூர்: ரூ.50 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமை; தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்; கணவர் குடும்பம் கைது

திருப்பூர் தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. பிளீச்சிங் ஆலை நடத்தி வந்த குப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சுகந்தி. இந்தத் தம்பதியின் ஒரே மக... மேலும் பார்க்க