Mariselvaraj-ஐ வாழ்த்தி பாடிய Vadivelu at Ananda Vikatan Cinema Awards 2024 | UN...
டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விரைவில் சந்திக்கவுள்ளனர்.
உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. இருப்பினும், ரஷியா போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து முதன்முறையாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருநாட்டுத் தலைவர்களும் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும், விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அதிக வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்த நிலையில், இருவரின் சந்திப்பும் நிகழவுள்ளது.