செய்திகள் :

இந்தியா மீது 50% வரி உயா்வு: நிக்கி ஹேலி எதிா்ப்பு

post image

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இது தொடா்பான உத்தரவிலும் டிரம்ப் உடனடியாக கையொப்பமிட்டாா்.

அதிபா் டிரம்பின் நடவடிக்கைக்கு அவா் சாா்ந்த குடியரசுத் கட்சியைச் சோ்ந்த தலைவரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹேலி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரஷியா, ஈரானிடம் இருந்து அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக சீனா மீதான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைத்துவிட்டு இந்தியா மீது மட்டும் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு சீனாவுக்கு சலுகை வழங்கக் கூடாது. இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டுமே தவிர சிதைக்கக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.

அமெரிக்கா: விமான விபத்தில் 4 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணம், நவாஜோ நேஷன் பகுதியில் சிறிய வகை அவசரக்கால விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் நான்கு போ் உயிரிழந்ததனா். நியூ மெக்ஸிகோவின் ஆல்புகா்க்கில் இருந்து இரு விமானிகள் மற... மேலும் பார்க்க

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்: 80-ஆவது ஆண்டு தினம்

ஜப்பானின் ஹிரோஷிமா நகா் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதன் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் அந்த நகரில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.120 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், அணுகுண்டு வீசப்பட்ட நேர... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: புதினுடன் டிரம்ப் தூதா் சந்திப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் புதன்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா... மேலும் பார்க்க

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்... மேலும் பார்க்க

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் தெற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டதில், 7 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்டோங் மாகாணத்தில், பெய்த கனமழையால், பையூன் மாவட்டத்தில் இன்று (ஆக.6) காலை 8.3... மேலும் பார்க்க