சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!
சீனாவின் தெற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டதில், 7 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாங்டோங் மாகாணத்தில், பெய்த கனமழையால், பையூன் மாவட்டத்தில் இன்று (ஆக.6) காலை 8.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அப்போது, அப்பகுதியில் வசித்த 14 பேர் நிலச்சரிவினுள் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் மேற்கொண்ட முயற்சிகளின் மூலம், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும், அப்பகுதியில் மீட்புப் பணிகளின் தற்காலிகத் தலைமை முகாம் அமைக்கப்பட்டு, மக்களை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான மீதமுள்ள 7 பேரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், மாலை 5 மணி நிலவரப்படி 996 பேர் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குவாங்டோங் மாகாணத்தில், கடும் மழை பெய்து வருவதால், அம்மாகாணத்தில் 16 ஆறுகள் அதன் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளன. இதனால், அம்மாகாண அரசு அங்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்