செய்திகள் :

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்!

post image

அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால், நாட்டின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும் என இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், துரதிருஷ்டவசமானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா இன்று அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% வரி விதித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள இந்த 50% வரியால், நாட்டின் ஏற்றுமதி 55% பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் பொருள்கள், ஜவுளித் துறை பொருள்கள், தோல் பொருள்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேச நலனை பாதுகாக்க நடவடிக்கை

அமெரிக்கா வரி விதிப்புக்கு மத்தியில், தேச நலனை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என்றும், 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. கச்சா எண்ணெய் பெற்றுக்கொண்டு ரஷியாவுக்கு இந்தியா அளிக்கும் நிதியானது உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டி, இதனை இந்தியா நிறுத்துவதற்கு கெடு விதித்திருந்தார்.

ரஷியாவிடமிருந்து எண்ணெய் பெறுவது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றங்களையும் அறிவிக்கவில்லை. இதனிடையே, இந்தியாவுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% வரியை இன்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி 50% ஆக அதிகரித்துள்ளது. இது, இந்திய ஏற்றுமதியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

Donald Trump Tariffs US's 50% tariff move to impact 55% of India's exports to be impacted, says FIEO

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

டிரம்ப்பின் 50 சதவிகித வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி அமெ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது.அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அற... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில், நிகழாண்டு துவங்கியது முதல் டெங்கு கா... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க