வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!
ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!
ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ஆண் நண்பர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அம்மாணவி நீண்டகாலமாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
காலை 11 மணியளவில் வீட்டுக்கு வந்த அவரின் பெற்றோர், நீண்ட நேரமாக தங்களின் மகள் வெளியே வராததால், சந்தேகமடைந்து அறையின் கதவை அடித்து உடைத்து உள்நுழைந்தனர்.
இந்த நிலையில்தான், தங்களின் மகள் தீக்குளித்து கடுமையான தீக்காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒடிஸாவில் கடந்த ஒரு மாதத்திலேயே இது மூன்றாவது தீக்குளிப்பு சம்பவமாகும். ஜூலை 12-ல் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது துறைத் தலைவர் பாலியல் தொல்லை அளிப்பதாகக் கூறி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஜூலை 19-ல் பாலங்காவில் 15 வயது சிறுமி ஒருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.