இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலை செய்யக்கோரி நாடு தழுவிய 2 -ம் கட்ட போராட்டம், அந்நாட்டின் சுதந்திர நாளான ஆக.14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரது கட்சியான தெஹ்ரிக்-இ-இன்ஸாஃப் சார்பில், நேற்று (ஆக.5) தேசியளவில் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தியதில், 240 பேர் கைது செய்யப்பட்டனர்.
இத்துடன், பாகிஸ்தான் அரசுப் படைகள் நள்ளிரவு மேற்கொண்ட திடீர் சோதனைகளின் மூலம், இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெஹ்ரிக்-இ-இன்ஸாஃப் கட்சியின் தற்போதைய தலைவர், ஆசாத் கைசர், இம்ரான் கானின் விடுதலைக்கான 2-ம் கட்ட போராட்டம், பாகிஸ்தானின் சுதந்திர நாளான ஆக.14 ஆம் தேதியன்று நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலைக்காக, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தினால், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் 144 தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!