செய்திகள் :

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

post image

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அந்நாட்டு ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபர் ஆசிஃப் அலி சர்தாரிக்கு பதிலாக, புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், அந்தச் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள் எனக் கூறி பாகிஸ்தான் ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் அஹமது ஷரீஃப் சௌதரி கூறுகையில், நாட்டை ஆட்சி செய்வதில், ராணுவத் தலைமைத் தளபதிக்கு எந்தவொரு ஆர்வமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இத்துடன், அதுபோன்ற எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர் நிராகரித்துள்ளார்.

நீண்டகாலமாக இணையத்தில் பரவி வரும் இந்தச் செய்தியை, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கடந்த ஜூலை 10 ஆம் தேதி வதந்தி எனக் கூறி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

The Pakistani military has denied reports that Army Chief General Asim Munir will take over as president.

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் தெற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டதில், 7 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்டோங் மாகாணத்தில், பெய்த கனமழையால், பையூன் மாவட்டத்தில் இன்று (ஆக.6) காலை 8.3... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மேலும் 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலை செய்யக்கோரி நாடு தழுவிய 2 -ம் கட்ட போராட்டம், அந்நாட்டின் சுதந்திர நாளான ஆக.14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்... மேலும் பார்க்க

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரஷியாவுடன் அமெரிக்காவின் வர்த்தகம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒலிம்பிக்ஸ் 2028 குறித்து விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தீவிரமடையும் பருவமழை! மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில், ஆக.5 முதல் 8 ஆம் தே... மேலும் பார்க்க

காஸாவின் கோரம்! பசி மரணங்கள் 200-யை எட்டியது! இதில் 90 பேர் குழந்தைகள்!!

காஸாவில் உணவின்றி பசியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-யை எட்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான காஸா போர் இரண்டாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ர... மேலும் பார்க்க