வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பர்கள். இதையொட்டி பக்தர்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.
இதன்படி, விழுப்புரத்திலிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 9.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் அதே நாளில் பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த இரு ரயில்களும் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!