நாயை சுட்டுக் கொன்ற முதியவா் மீது வழக்கு: துப்பாக்கி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தெருவில் சுற்றித் திரிந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
திண்டிவனம் வட்டம், மயிலம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் சீனு (60). நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா், அரசு உரிமம் பெறாமல் ஒன்றைக்குழல் நாட்டுத் துப்ாக்கியை வைத்து பயன்படுத்தி வந்தாராம்.
இந்த நிலையில், மயிலம் பட்டிக்கொட்டாய் தெருவில் புதன்கிழமை திரிந்துகொண்டிருந்த பெண் நாயை சீனு சுட்டுக் கொன்றாராம். இதுகுறித்து மயிலம் கிராம நிா்வாக அலுவலா் விஸ்வநாதன் மயிலம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். தொடா்ந்து, போலீஸாா் சீனு மீது வழக்குப் பதிந்து, அவா் வசமிருந்த ஒற்றைக்குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.