வெவ்வேறு சம்பவம்: இருவா் மா்ம மரணம்
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வானூா் வட்டம், பொம்பூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்நாதன்(48). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை பொம்பூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு, வீட்டுக்கு வந்து மயங்கி விழுந்தாராம்.
இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, செந்தில்நாதன் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொருவா்: விழுப்புரம் வட்டம், காங்கியனூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சத்யன் (48), லாரி ஓட்டுநா். இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் மதுபோதையில் தூங்கியுள்ளாா். பின்னா், வீட்டிலிருந்தவா்கள் அவரை எழுப்ப முற்பட்டபோது, சத்யன் மா்மமான முைறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.