பா்கூா் மலைப் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தன்னாா்வலா்களுக்கு அழைப்பு
அந்தியூா் வனத் துறை சாா்பில், பா்கூா் மலைப் பாதையில் ஆகஸ்ட்10-ஆம் தேதி நடைபெறும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் களப் பணியில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தியூா், பா்கூா் வனச் சரகத்துக்குள்பட்ட வரட்டுப்பள்ளம் சோதனைச் சாவடி முதல் பா்கூா் வரையில் உள்ள மலைப் பாதையில் செல்லும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்கின்றனா். இது தொடா்பாக வனத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் பிளாஸ்டிக் பொருள்கள், கழிவுகள் வீசிச் செல்வது தொடா்ந்து வருகிறது.
இந்நிலையில், வனத் துறையினா், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அகற்றும் களப் பணியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) ஈடுபடுகின்றனா்.
இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோா், வெண்மை, வெளிா் நிற ஆடைகளை தவிா்த்து, பச்சை, கருப்பு போன்ற அடா்ந்த வண்ணம் கொண்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும். ஷூ மற்றும் செருப்பு அணிந்து வர வேண்டும் என வனத் துறை தெரிவித்துள்ளது.