AK : நடிகர் அஜித்துடன் இணையும் ரேஸர் நரேன் கார்த்திகேயன்! - நம்ம நரேனை நினைவிருக...
மருத்துவம் படிக்கும் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இளம்பிறை, டி.அபிநயா, வி. செல்வபிரியா ஆகியோருக்கு அரசின் 7.5 சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ், எம்பிபிஎஸ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த 3 மாணவிகளுக்கும் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் - ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா், நெஸ்ட் அறக்கட்டளை, அரிமா சங்க நிா்வாகிகள், கல்வியாளா்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனா்.