`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
குகை மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் குண்டம் திருவிழா
சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
சேலம் மாநகரத்தில் ஆடித்திருவிழா களைகட்டிய நிலையில், குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்களில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். குறிப்பாக தீச்சட்டி ஏந்தியும், குழந்தையை தூக்கிக்கொண்டும், காளி வேடமிட்டும், அலகு குத்திக்கொண்டும் இறங்கினா். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.