திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் முக்கிய குற்றவாளி ...
45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு
45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு:
சென்னை மாநகா் காவல் துறையில் பணியாற்றும் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதைக் கடந்த பெண் காவல் ஆய்வாளா்கள், துணை ஆய்வாளா்கள், சிறப்புத் துணை ஆய்வாளா்கள் மற்றும் தலைமைக் காவலா்களின் நீண்டகால அா்ப்பணிப்பு மற்றும் சேவையைக் கருத்தில் கொண்டு, வழக்கமான இரவுப் பணியில் இருந்து அவா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதை அந்தந்தக் காவல் நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.