செய்திகள் :

Health: மெக்னீசியம் கிரீம் தடவினால் தூக்கம் நன்றாக வருமா?!

post image

செல்போனை ஓப்பன் செய்தாலே, 'நைட்ல மெக்னீசியம் கிரீமை உடம்புல தடவிக்கிட்டுப் படுத்தா நல்லா தூக்கம் வரும்' என்கிற ரீல்ஸ் வந்துகொண்டே இருக்கிறது.

மெக்னீசியம் கிரீம் என்றால் என்ன; அதன் முக்கியத்துவம்; நன்மைகள்; மெக்னீசியம் குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள்; மெக்னீசியத்திற்கும் தூக்கத்திற்குமான தொடர்பு என்ன ஆகியவற்றைப்பற்றி சென்னையைச் சேர்ந்த பொதுநல மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர். N. ராஜா அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வோம்.

மெக்னீசியம் கிரீம்
மெக்னீசியம் கிரீம்

மெக்னீசியம் மனித உடலுக்குத் தேவையான நான்காவது தாது (mineral) ஆகும். இது மனித உடலில் நடக்கும் 300-க்கும் மேற்பட்ட உயிர் வேதியியல் மாற்றங்களில் கோ ஃபேக்டராக (co factor) செயல்படுகிறது. தவிர, ஆற்றல் உற்பத்திக்கும், தசை நார்கள் சுருங்கி விரியவும், டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்ற புரதங்கள் உற்பத்திக்கும், கால்சியம், பாஸ்பரஸ் முதலிய தாதுக்களை நம் செல்களுக்குள்ளே அனுப்புவதற்கும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீர் செய்வதற்கும் மெக்னீசியம் கட்டாயம் தேவை.

இயற்கையாக மனித உடலில் 25 கிராம் மெக்னீசியம் காணப்படும். இதில் 50 முதல் 60 சதவீதம் எலும்புகளிலும் தசைகளிலும் காணப்படுகிறது. தவிர, ஒரு சதவிகிதம் ரத்தத்தில் காணப்படும். பொதுவாக, ஆண்களுக்கு 420 மில்லி கிராமும், பெண்களுக்கு 320 மில்லி கிராமும் ஒரு நாளைக்கு தேவையான மெக்னீசியத்தின் அளவாக உள்ளது.

இதன் அளவு சிறுநீரகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஏனென்றால், ஒரு நாளைக்கு 120 மில்லி கிராம் மெக்னீசியம் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகிறது.

மெக்னீசியம் கிரீம்
மெக்னீசியம் கிரீம்

எல்லாவிதமான பழங்கள், காய்கறிகள், பால் முதலியவற்றில் மெக்னீசியம் உள்ளது. நமக்குத் தினந்தோறும் தேவையான மெக்னீசியத்தின் அளவில் பத்து சதவீதம் நாம் பருகும் தண்ணீரிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். பால் பொருள்கள், பப்பாளி, வாழை, முருங்கைக்கீரை, பட்டாணி, சோயாபீன்ஸ் மற்றும் பிற கீரை வகைகளில் அபரிமிதமான மெக்னீசியம் சத்து உள்ளது. அசைவ வகைகளை எடுத்துக்கொண்டால் மீன் மற்றும் இறைச்சி வகைகளில் உள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மெக்னீசியம் உள்ளது. எனவே மெக்னீசியத்திற்காக சப்ளிமெண்ட் எடுப்பது பெரும்பாலும் தேவைப்படாது. ஒருவேளை மெக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைபெற்று மெக்னீசியம் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

மெக்னீசியம் கிரீம்
மெக்னீசியம் கிரீம்

பொதுவாக மெக்னீசியம் குறைபாட்டால் வாய் குமட்டல், வாந்தி, தசை பலவீனம், சோர்வு, கை கால் நமைச்சல், குத்தல், தலைவலி, இதய தசைகள் சோர்வடைதல், சீரணக்கோளாறு, கால்சியம் குறைபாடு, பொட்டாசியம் குறைபாடு, இதயத்துடிப்புக் குறைதல் போன்ற அறிகுறிகளைக் காட்டும்.

நீரிழிவு நோயாளிகள், மது அருந்துபவர்கள், நீண்ட காலமாக பேதியால் அவதிப்படுபவர்கள், குடலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் மெக்னீசியம் குறையாடு விஷயத்தில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.

பொதுநல மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர். N. ராஜா
பொதுநல மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர். N. ராஜா

மெக்னீசியத்தின் அளவு உடலில் அதிகரித்தால் மயக்கம், குழப்பம், மாறுபட்ட இதயத்துடிப்பு, குறைந்த ரத்த அழுத்தம், தூக்கமின்மை, தசை சோர்வடைதல் முதலிய விளைவுகளை உண்டாக்கும்.

நாம் உறங்குவதற்கு மெலடோனின் எனும் ஹார்மோன் காரணமாக உள்ளது. இந்த மெலடோனின் (melatonin) ஹார்மோன் உற்பத்திக்கு மெக்னீசியம் அவசியமாகிறது. எனவே மெக்னீசியம் கிரீம்களை தோலில் பூசிக்கொண்டால் மெக்னீசியம் தோலால் உறிஞ்சப்பட்டு மெலடோனின் உற்பத்தியைத் தூண்டி தூக்கத்தை வரவழைக்கும். என்றாலும், ஒரு மருத்துவரின் ஆலோசனைப்பெற்று பயன்படுத்துவதே நல்லது.''

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Top News: `திருப்பூர் SSI கொலை டு இந்தியா மீது 50% வரி போட்ட ட்ரம்ப்' - ஆகஸ்ட் 6 ரவுண்ட்அப்

ஆகஸ்ட் 6 - முக்கிய செய்திகள்!* அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார்.* மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுலாத்தலமாக மாதேரான் மலைப்ப... மேலும் பார்க்க

வியட்நாமில் `ஆப்பிள் மேக்புக்' : மிச்ச பணத்தில் 11 நாட்கள் டூர்; பலே பிளான் போட்ட இந்தியர் - எப்படி?

ஒரு இந்தியர், தனது சாமர்த்தியமான யோசனை மூலம் `ஆப்பிள் மேக்புக்'கை வியட்நாமில் குறைந்த விலையில் வாங்கி, அங்கே பதினொரு நாட்கள் விடுமுறையை அனுபவித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்தியாவில் ஆப்பிள... மேலும் பார்க்க

Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! என்ன வீடியோ அது?

நடிகை தீபிகா படுகோனின் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு விளம்பர வீடியோ, 1.9 பில்லியன் பார்வைகளைப் பெற்று இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக புதிய சாதனை படைத்துள்ளது. ஹில்டன் ஹோட்டல் நிறுவனத்துட... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றம்: `கட்சி செய்தித்தொடர்பாளர் நீதிபதியாக நியமனமா?' - பாஜக சொல்வதென்ன?

மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக்குழு 3 நீதிபதிகளை நியமித்து பரிந்துரை செய்துள்ளது. அஜித் காதேதன்கர், அராதி சாதே, சுஷில் கோடேஷ்வர் ஆகியோர் பெயர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சுப்ரீ... மேலும் பார்க்க

தனி கொடி, நாணயம்... 125 ஏக்கர் காட்டுப் பகுதியை ஒரு புதிய நாடாக உருவாக்கிய 20 வயது இளைஞர் - எப்படி?

பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்பவர் தான் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ... மேலும் பார்க்க

இறந்த அம்மாவின் வங்கி கணக்குக்கு திடீரென கிரெடிட்டான பல கோடி ரூபாய் - அதிர்ச்சியில் உறைந்த மகன்

உத்திர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த 20 வயது இளைஞரான தீபக் என்பவர் பயன்படுத்தும் வங்கி கணக்கில் திடீரென 37 இலக்கங்களில் (10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299) ஒரு பெரிய தொகை வந்ததைக்... மேலும் பார்க்க