செய்திகள் :

மும்பை உயர்நீதிமன்றம்: `கட்சி செய்தித்தொடர்பாளர் நீதிபதியாக நியமனமா?' - பாஜக சொல்வதென்ன?

post image

மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக்குழு 3 நீதிபதிகளை நியமித்து பரிந்துரை செய்துள்ளது. அஜித் காதேதன்கர், அராதி சாதே, சுஷில் கோடேஷ்வர் ஆகியோர் பெயர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

இதில் அராதி சாதே, பிரபல குடும்ப வழக்கறிஞர் கிராந்தி சாதேயின் மகள் ஆவார். அராதே சாதே இதற்கு முன்பு பா.ஜ.கவில் இருந்தார்.

அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மும்பை பா.ஜ.க செய்தித்தொடர்பாளராக பணியாற்றிவிட்டு அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அராதியின் தந்தையும் பா.ஜ.கவில் இருந்தவர்தான். அவர் பா.ஜ.க சார்பாக மும்பையில் நடிகர் சுனில் தத்தை எதிர்த்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.

அராதி சாதே

தற்போது நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அராதி சாதே வருமான வரி தொடர்பான சட்டத்தில் நிபுணர் ஆவார். பாஜக-வை சேர்ந்த ஒருவரை நீதிபதியாக நியமித்து இருப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத்பவா) கடும் விமர்சனம் செய்துள்ளது.

அக்கட்சியின் எம்.எல்.ஏ.ரோஹித் பவார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ''ஆளும் கட்சியின் கருத்துக்களை பொதுவெளியில் எடுத்துச்சொல்லக்கூடிய ஒருவரை நீதிபதியாக நியமித்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் உயர்மட்டக் கமிட்டி இந்த நியமனத்தை அறிவித்தாலும், இந்த நியமனம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே தெரிகிறது. இந்நடவடிக்கை நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் ரோஹித் பவார் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை உயர்நீதிமன்றம்

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க செய்தித்தொாடர்பாளர் கேசவ் உபாத்யா,''அராதே 1.5 ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜ.கவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு பா.ஜ.கவுடன் இப்போது தொடர்பு கிடையாது. இதற்கு முன்பு 1962-ம் காங்கிரஸ் ஆட்சியில் பஹ்ருல் இஸ்லாம் என்பவர் ராஜ்ய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1972-ம் ஆண்டு ராஜ்ய சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை ஹவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்தார்கள். 1980-ம் ஆண்டு அவர் நீதித்துறையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் மீண்டும் அரசியலில் நுழைந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! என்ன வீடியோ அது?

நடிகை தீபிகா படுகோனின் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு விளம்பர வீடியோ, 1.9 பில்லியன் பார்வைகளைப் பெற்று இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக புதிய சாதனை படைத்துள்ளது. ஹில்டன் ஹோட்டல் நிறுவனத்துட... மேலும் பார்க்க

தனி கொடி, நாணயம்... 125 ஏக்கர் காட்டுப் பகுதியை ஒரு புதிய நாடாக உருவாக்கிய 20 வயது இளைஞர் - எப்படி?

பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்பவர் தான் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ... மேலும் பார்க்க

இறந்த அம்மாவின் வங்கி கணக்குக்கு திடீரென கிரெடிட்டான பல கோடி ரூபாய் - அதிர்ச்சியில் உறைந்த மகன்

உத்திர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த 20 வயது இளைஞரான தீபக் என்பவர் பயன்படுத்தும் வங்கி கணக்கில் திடீரென 37 இலக்கங்களில் (10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299) ஒரு பெரிய தொகை வந்ததைக்... மேலும் பார்க்க

Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ஆகஸ்ட் 4 ரவுண்ட்அப்

* தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் ரூ. 32,554 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானத... மேலும் பார்க்க

ஏர் இந்திய விமானத்தில் கரப்பான் பூச்சித்தொல்லை; விமானத்தை நிறுத்தி மருந்தடித்த ஊழியர்கள்!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு இன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம் இந்தியாவை நெருங்கியபோது விமானத்தில் கரப்பான் பூச்சி ஆங்காங்கே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.இரண்ட... மேலும் பார்க்க

Eng v Ind : `டெஸ்ட் போட்டினா இதுதான்.!’ - இந்தியாவின் த்ரில் வெற்றியின் திக் திக் மொமென்ட்ஸ் | Album

Eng v Ind | இந்தியாEng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind E... மேலும் பார்க்க