வட மாநிலத்தவர்களை இங்கு சேர்ப்பது தவறானது; ஊழலும்கூட: நயினார் நாகேந்திரன் பேட்டி
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!
முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இன்று (ஆக. 6) காலை, புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் நகர்மன்ற முன்னாள் தலைவருமான கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், தி.மு.க. அயலக அணி மாநிலச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்தது குறித்து கார்த்திக் தொண்டைமான் செய்தியாளர்களுடன் பேசுகையில், “அதிமுகவில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக கட்சி போகிற போக்கே சரியில்லை” என்று தெரிவித்தார்.
திமுகவில் புதுக்கோட்டை மன்னர் வாரிசு இணைந்திருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு