இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!
இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்தார்.
டிரம்ப்பின் இந்த விமர்சனம், இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடையேயும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனால், இறந்த பொருளாதாரம் என்று டிரம்ப் கூறிய இந்தியாவில்தான், அவரது நிறுவனமும் அசுர வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இருப்பினும், இதுபற்றி அவர் உலக அரங்குக்கு எதுவும் தெரிவிக்க மறுப்பதேனோ?
இந்திய கட்டுமானத் துறையில் டிரம்ப்பின் நிறுவனம், 2011-லிருந்து பெரும் முதலீடுகளை செய்துள்ளது.
2011-லிருந்து கடந்த 2024 (சுமார் 13 ஆண்டுகளாக) வரை 3 மில்லியன் சதுர அடிக்கு மட்டுமே கட்டடங்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது.
ஆனால், கடந்த நவம்பரில் அதிபராக தேர்வானதிலிருந்து ஓராண்டில் (வெறும் 9 மாதங்களில்) மட்டும் கிட்டத்தட்ட 8 மில்லியன் சதுர அடிக்கு கட்டடங்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. 3 மில்லியன் சதுர அடி திட்டத்தை, கடந்த ஓராண்டில் மட்டும் 11 மில்லியனாக டிரம்ப் நிறுவனம் அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட 3 மடங்குகொண்ட அசுர வளர்ச்சியே.