செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து மீண்டு, இன்று 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவடைந்தது. இதற்கு ரிசர்வ் வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் 'நடுநிலை' நிலைப்பாட்டுடன் இருந்ததே முக்கிய காரணமாகும்.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, எதிர்மறையான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் இந்தியா மீதான அமெரிக்க வரி ஆகியவற்றால் ரூபாயின் லாபம் கட்டுப்படுத்ப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.72 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.87.63 முதல் ரூ.87.80 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73ஆக நிறைவடைந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அதன் இன்ட்ரா-டே அளவை மீண்டும் அடைந்து, டாலருக்கு நிகரான 22 காசுகள் சரிந்து ரூ.87.88 ஆக முடிந்தது.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி

மும்பை: வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும்.இந்நிலையில், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக... மேலும் பார்க்க

அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

பயனர்களுக்காக புதிய திட்டத்தை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரம்பற்ற தொலைத்தொடர்புகளைக் கொண்டிருக்கும் வகையில் ரெட்எக்ஸ் என்ற குடும்ப திட்டத்தை ரூ.1,601 விலையில் அறிமுகம் ச... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த பாதையில் செயல்பட்டதால், முக்கிய வட்டி விகிதங்கள் 'நடுநிலை' நிலைப்பாட்டுடன் மாறாமல் இருந்ததால், இன்றைய வர்த்தகத்தில், தொடர்ந்து இரண்டாவது அமர்விலும் இந்திய குறியீடுகள... மேலும் பார்க்க

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9 ஸ்மார்ட்போனுக்கு ரூ.22 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியினை இணைய விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் பெறலாம். கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன், ஆகஸ்ட் 20 ஆம்... மேலும் பார்க்க

ஆப்பிள் நிறுவனத்தில் கோடிகளில் வேலை வேண்டுமா? சம்பள விவரங்கள் இதோ..!

ஆப்பிள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் வியக்கத்தக்கதாக உள்ளதாக பல்வேறு தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தொழில்நுட்ப உலகில் நாள்தோறும் மாற்றங்கள் நிலவி வரும்நிலையில், நிற... மேலும் பார்க்க

இந்தியாவில் மோட்டோ ஜி86 பவர் அறிமுகம்! சிறப்பம்சங்கள்...

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோரோலா நிறுவனம் அடுத்தடுத்து புதிய தயார... மேலும் பார்க்க