வட மாநிலத்தவர்களை இங்கு சேர்ப்பது தவறானது; ஊழலும்கூட: நயினார் நாகேந்திரன் பேட்டி
இந்தியாவில் மோட்டோ ஜி86 பவர் அறிமுகம்! சிறப்பம்சங்கள்...
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோரோலா நிறுவனம் அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.
முன்னதாக, மோட்டோ ஜி86, ஜி96 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.
இந்த நிலையில், அதிக பேட்டரி திறன் கொண்ட மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மோட்டோரோலா, ஃபிளிப் கார்ட் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் 6,720 எம்ஏஎச் பேட்டரி, 50 மெகாபிக்சல் சோனி லைட்டியா - 600 கேமரா ஆகியவை ஆகும்.
8 ஜிபி ரேம், 128 ஜிபி நினைவகம் (1 டிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்)
1.5 கே போல்ட் 4500 நிட்ஸ் அம்சம் கொண்ட 6.7 இன்ச் சூப்பர் எச்டி டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 15, மீடியாடெக் டைமன்சிட்டி 7400 ப்ராசஸர்
பின்புறக் கேமிரா - 50 மெகாபிக்சல் சோனி லைட்டியா + 8 மெகாபிக்சல், முன்புறக் கேமிரா - 32 மெகாபிக்சல்
நிறங்கள் : பான்டோன் கோல்டன் சைப்ரஸ், பான்டோன் காஸ்மிக் ஸ்கை, பான்டோன் ஸ்பெல்பவுண்ட்
ஓராண்டு வாரண்டி
விலை ரூ. 17,999 (ஃபிளிப் கார்ட் தளத்தில் குறிப்பிட்ட சில வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது)