3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperf...
தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!
புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.98,820 ஆக உள்ளதாக அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்தது. அதே வேளையில் 99.9 சதவிகித தூய்மை கொண்ட தங்கம் அதன் முந்தைய சந்தை முடிவில் ரூ.98,020 ஆக இருந்தது.
தலைநகரில் 99.5 சதவிகித தூய்மை கொண்ட தங்கம் இன்று 10 கிராமுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.98,500 ஆக உள்ளது. அதுவே நேற்று 10 கிராமுக்கு ரூ.97,800 ஆக முடிவடைந்தது.
பாதுகாப்பான புகலிடத்திற்கான தேவை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் அதன் வட்டி விகிதக் குறைப்பு சுழற்சியை மீண்டும் தொடங்கும் என்ற ஒருமித்த கருத்தால் தங்கத்தின் விலை இன்று உயர்ந்தது.
பெடரல் ரிசர்வ் அதிகாரியான டோவிஷ் கருத்துக்கள், கடந்த வாரம் ஏமாற்றமளிக்கும் வேலைவாய்ப்பு சந்தை உள்ளிட்டவை, செப்டம்பரில் நடைபெறவிருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கியி கூட்டத்தில் வட்டி விகிதக் குறைப்புகளைப் குறித்த வர்த்தகர்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.
இது குறித்த சரஃபா சங்கம் தெரிவித்ததாவது:
இன்று வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,12,000 ஆகவும், அதன் முந்தைய சந்தை அமர்வில் கிலோவிற்கு ரூ.1,10,000 ஆக இருந்தது.
ஜூன் மாதத்தில் அமெரிக்க தொழிற்சாலையில் ஆர்டர்கள் குறைந்ததால், நேற்று ஸ்பாட் தங்கத்தின் விலை 0.30 சதவிகிதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 3,375 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
ரஷ்ய எண்ணெய் கொள்முதலால், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது கணிசமாக வரிகளை விதிக்கப்போவதாக மிரட்டியதும், என்டிஎஃப் சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 88 ரூபாயாக சரிந்ததால் வெள்ளியின் விலை உயர்ந்தது.
இதற்கிடையில், நியூயார்க்கில் ஸ்பாட் தங்கம் விலை 20.95 டாலர் குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 3,352.61 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
சர்வதேச அளவில், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 37.39 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமானது.
இதையும் படிக்க: ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!