பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் லாபம் ரூ.292.5 கோடியாக உயர்வு!
புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 26 சதவிகிதம் அதிகரித்து ரூ.292.5 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.232.6 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் மொத்த வருமானம் ரூ.2,468.7 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட், காசியாபாத்தில் அதன் வீட்டுவசதித் திட்டத்திற்கான வலுவான தேவை காரணமாக, 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதன் விற்பனை முன்பதிவுகளில் 4 மடங்கு அதிகரித்து ரூ.12,126.4 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் விற்பனை முன்பதிவுகள் கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,029.5 கோடியாக இருந்தது.
மார்ச் 2025 நிலவரப்படி, குழுமம் 193 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 302 திட்டங்களை வழங்கியுள்ள நிலையில் தற்போது 203 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 130 திட்டங்கள் அதன் கைவசம் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!