செய்திகள் :

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

post image

கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை கோபி, சுதாகர் ஈர்த்துள்ளார்கள்.

இவர்களின் தனித்துவமான நகைச்சுவை விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதுடன் மீம்ஸ்களாக மாறி இணையத்தில் வைரலாகும்.

இவர்கள் இருவரும், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள்ளது.

இப்படத்தை விஷ்ணு விஜயன் இயக்க, பரிதாபங்கள் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. இதில், அவர்கள் மீதான விமர்சனங்களை கிண்டல் செய்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில் வெளியான இவர்களது சொசைட்டி பாவங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

The promo video of the first song of the film 'Oh God Beautiful' starring Gopi and Sudhakar has been released.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் காளமாடன் படத்தினைக் குறித்து தயாரிப்பாளர் பெருமையாகக் கூறியுள்ளார். மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் காள... மேலும் பார்க்க

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியின் மூலமாக பாடலை நிறைவு செய்ததாக இசையமைப்பாளர் அனிருத் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகியுள... மேலும் பார்க்க

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

கோபி சுதாகரின் சோசியல் பரிதாபங்கள் விடியோவுக்கு ரசிகர்கள், இயக்குநர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை கோபி - சுதாகர் என்ற யூடியூபர்கள் நடத்தி வருகிறார்கள். 6... மேலும் பார்க்க

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

நாதஸ்வரம் தொடரில் கின்னஸ் சாதனை படைத்த காட்சியில் (எபிஸோட்) முழுக்க முழுக்க இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஸ்ருதி சண்முகப் பிரியா தெரிவித்துள்ளார். கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற 22 நிமிடக் ... மேலும் பார்க்க

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஹான் பாண்டா நடித்த சய்யாரா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியை அடைந்துள்ளது. நடிகை அனன்யா பாண்டேவின் சகோதரான அஹான் பாண்டே சய்யாரா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ... மேலும் பார்க்க

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்! தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

புணேவைச் சேர்ந்த உள்ளூர் ஹிந்துத்துவ அமைப்பினர், சத்ரபதி சிவாஜி குறித்து வெளியாகவிருக்கும் புதிய திரைப்படத்தை தடை செய்யக்கோரி திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இயக்குநர் ராஜ் மோரேவின... மேலும் பார்க்க