பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!
இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!
கோபி சுதாகரின் சோசியல் பரிதாபங்கள் விடியோவுக்கு ரசிகர்கள், இயக்குநர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை கோபி - சுதாகர் என்ற யூடியூபர்கள் நடத்தி வருகிறார்கள்.
62.3 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ள இவர்கள் நேற்று (ஆக.7) சொசைட்டி பாவங்கள் என்ற விடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த விடியோவில் சாதியக் கொடுமையால் சீரழியும் இளைஞர்கள் குறித்து எடுக்கப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் ஆதரவு கிடைத்து வருகிறது.
சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூலில், “பிரமாதமான பதிவு. மனமார்ந்த வாழ்த்துகள் பரிதாபங்கள் சுதாகர், கோபி” எனப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சிஎஸ் அமுதன் தனது எக்ஸ் பக்கத்தில், “பரிதாபங்கள். கொஞ்சம் பெரிதாக ரதம்னு எடுக்க நினைத்தோம். ஆனால், கிண்டலைப் போல எதுவும் வேலை செய்யாதென பலரையும் விட எனக்கு நன்றாகத் தெரியும். சூப்பர்டா தம்பிகளா!” எனப் பதிவிட்டுள்ளார்.
Parithabangal . Konjam lengtha Ratham nu eduka nenachom but I more than anybody should have known, nothing works like satire . Super da thambigala!
— CS Amudhan (@csamudhan) August 4, 2025
இந்த விடியோ ஒரே நாளில் 21 லட்சம் (2.1 மில்லியன்) பார்வைகளைக் கடந்து வருகிறது.
Congratulations are pouring in from fans and directors for Gopi Sudhakar's social paavangal video.