செய்திகள் :

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

post image

இந்தியா மீது அடுத்த 24 மணிநேரத்திற்குள் கணிசமாக வரி உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா ஒரு சிறந்த வணிக பங்குதாரர் அல்ல என்றும், இந்தியாவுடன் மிகச்சிறிய அளவே வணிகத்தை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சர்வதேச ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்தியா மீதான வரி குறித்து டிரம்ப் பேசியதாவது,

இந்தியா பற்றி மக்கள் கூற விரும்பாதது, அவர்கள் அதிக வரி விதிக்கும் நாடு. மற்றவர்களை விட இந்தியா அதிக வரிகளைக் கொண்டுள்ளது. அதிக வரி விதிப்பதால், இந்தியாவுடன் நாங்கள் மிக மிகச் சிறிய அளவிலேயே வணிகத்தை வைத்துள்ளோம்.

இந்தியா ஒரு சிறந்த வணிக பங்குதாரர் அல்ல; ஏனெனில், அவர்கள் எங்களுடன் அதிக வணிகம் செய்கின்றனர். ஆனால், அந்த அளவு இந்தியாவுடன் நாங்கள் வணிகத் தொடர்பு வைத்திருக்கவில்லை. அதனால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்க முடிவு செய்துள்ளோம். ஆனால், அடுத்த 24 மணிநேரத்தில் மிக கணிசமான வரியை உயர்த்தலாம் என நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

இந்தியா மீது 25% வரி

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது அதிக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என நேற்று (ஆக. 4) அதிபர் டிரம்ப் அறிவித்தார். ரஷியாவில் இருந்து அதிக அளவு இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்தப் பணம் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுவதாகவும், இதைப்பற்றி இந்தியா கவலைகொள்ளவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையும் படிக்க | அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

Trump says he will raise tariffs on India 'very substantially' over next 24 hours

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

வங்கதேசத்தில், அடுத்தாண்டு (2026) பிப்ரவரியில் அந்நாட்டின் பொது தேர்தல் நடத்தப்படும் என முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது.வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரத... மேலும் பார்க்க

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷியாவின் ஆளில்லா சிறிய ரக விமானங்களில் (ட்ரோன்கள்) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானில் வடிவமைக்கப்பட்டு ரஷிய ராணுவத்தால் பயன்படுத்தப்பட... மேலும் பார்க்க

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரத்தில் பெண்கள்!

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால் கொல்லப்பட்ட பாலஸ்தீன ஆர்வலரின் உடலை ஒப்படைக்க வேண்டுமென, அவரது தாய் உள்பட ஏராளமான பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேற்கு கரையில், பாலஸ்தீன ஆர்வலரும், ... மேலும் பார்க்க

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவுக்கு அருகே நிலைநிறுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேற முடிவு செய்தி... மேலும் பார்க்க

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலைச் செய்யக் கூறி அவரது ஆதரவாளர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ட்ரோன் மூலம் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைபர் பக்துன்குவாவின், பண்ணு மாவட்டத்திலுள்ள ஹுவாய்த் காவல் நில... மேலும் பார்க்க