செய்திகள் :

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

post image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ட்ரோன் மூலம் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவாவின், பண்ணு மாவட்டத்திலுள்ள ஹுவாய்த் காவல் நிலையத்தின் மீது, தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டை வீசியுள்ளனர்.

ஆனால், காவல் நிலையத்தின் முற்றத்தில் தரையிறங்கிய அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை என அதிகாரிகள் இன்று (ஆக்.5) தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைப் பிடிக்க அப்பகுதி முழுவதும், தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினரின் கட்டமைப்புகளின் மீது தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் பருவமழைக்கு 141 குழந்தைகள் உள்பட 302 பேர் பலி, 727 பேர் காயம்!

Militants have reportedly dropped a bomb on a police station using a drone in Pakistan's Khyber Pakhtunkhwa province.

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலைச் செய்யக் கூறி அவரது ஆதரவாளர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாகிஸ்தானில் இடைவிடாத பெய்த பருவமழையால் இதுவரை 302 பேர் உயிரிழந்துள்ளனர், 727 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ.13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

அமெரிக்காவில் விசா காலம் முடிந்தும், வெளிநாட்டினர் அதிக காலம் தங்குவதைத் தடுக்கும் வகையில், விசா பெறும்போது, இனி ரூ.13.17 லட்சத்துக்கு நுழைவுப் பத்திரங்களை (டெபாசிட்) அளிக்கும் விதிமுறையை அமெரிக்கா கொ... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும்: டிரம்ப்

நியூயாா்க்: ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி படிப்படியாக மேலும் அதிகரி... மேலும் பார்க்க

ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதில்

வாஷிங்டன்: ரஷியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.சீனாவும், இந்தியாவும் ரஷியாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ண... மேலும் பார்க்க

இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள்: இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை இலங்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.அரசுமுறைப் பயணமாக கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க