மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்ற...
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்
ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஆறாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, பிடிபி கட்சி உறுப்பினர்கள் இன்று (ஆக. 5) ஜம்முவில் வீதிகளில் இறங்கி தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்னொருபுறம் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரத்து செய்தததன் ஆறாம் ஆண்டை நினைவுகூர்ந்து பாஜகவினர் ஸ்ரீநகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வாகன பேரணியாகச் சென்றும் கேக் வெட்டியும் கொண்டாடினர்.

இதனிடையே, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ’ஆபரேஷன் அகல்’ என்று பெயரிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதையடுத்து, முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
