பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!
இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இந்த தொடருக்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றதால், இந்திய அணி 12 புள்ளிகளைப் பெற்றது. இதன் மூலம் 28 புள்ளிகள் மற்றும் 46.67 சதவிகித வெற்றிகளுடன் இந்திய அணி மூன்றாமிடம் பிடித்துள்ளது.
The #WTC27 table following the thriller at The Oval #ENGvIND ✍️: https://t.co/BpHDFeOXy8pic.twitter.com/cPo96mFaGS
— ICC (@ICC) August 4, 2025
இந்திய அணியைப் போன்று இங்கிலாந்து அணியும் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளபோதிலும், புள்ளிப்பட்டியலில் அந்த அணி 26 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்துள்ளது. அந்த அணியின் வெற்றி சதவிகிதம் 43.33 ஆக உள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட்டின்போது, பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், இங்கிலாந்து அணிக்கு இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டன. அதன் காரணமாக அந்த அணி நான்காமிடத்தில் உள்ளது.
2025-2027 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த சுழற்சியில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய மேற்கிந்தியத் தீவுகள் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளது.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 7, 8 மற்றும் 9-வது இடங்களில் முறையே உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்துள்ளது. இதன் மூலம், 66.67 சதவிகித வெற்றிகளுடன் அந்த அணி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
4 புள்ளிகள் மற்றும் 16.67 சதவிகித வெற்றிகளுடன் வங்கதேச அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்