ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!
பும்ரா இருந்திருந்தால் வெற்றி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்: முகமது சிராஜ்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சிராஜ் கூறியதென்ன?
இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடைசி டெஸ்ட்டில் விளையாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
- ! #TeamIndia | #ENGvIND | @mdsirajofficial
— BCCI (@BCCI) August 5, 2025
WATCH
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் மிகவும் அற்புதமாக விளையாடினார்கள். கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியது நம்பமுடியாத விதமாக இருந்தது. நான் ஜஸ்பிரித் பும்ராவை மிஸ் செய்தேன். ஏனெனில், கடைசி போட்டியில் அவர் விளையாடியிருந்தால் இந்த வெற்றி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஜஸ்பிரித் பும்ரா மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.
பணிச்சுமை காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!