செய்திகள் :

பள்ளியில் அறியாத பாரியை, 'வேள்பாரி'யில் கண்டேன்! - மனதை மாற்றிய ஒரு நாவல் | #என்னுள்வேள்பாரி

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள்  மூவேந்தர்களின் போர் வீரம் மற்றும் அவர்களது சாதனைகளை சொல்லித்தான் தமிழக வரலாற்றை தெரிவிப்பார்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் "வீரயுக நாயகன் வேள்பாரி" என்னும் வரலாற்று புதினத்தின் வழியே ஒரு பெரும் வள்ளல் தமிழ் மக்களின் மனங்களில் நுழைந்துள்ளார். அப்படி இந்த நாவல் வழியே என்னுள் நுழைந்ததை உங்களுடன்  பகிர்கிறேன்.

   சமவெளியில் போர் புரிந்து நிலம் மற்றும் வளங்களை கைப்பற்றியும், வெளிநாட்டவருடன் வாணிபம் செய்தும் யார் வளமிக்கவர் என்ற போட்டியில் தங்களை முன்னிலைப்படுத்த பேரரசர்கள் ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் காடுகள் சூழந்த மலைகளில்  14 குலத்தை சேர்ந்தவர்களுடன் வேளீர் குல தலைவன் பாரி இயற்கையுடன் இணைந்தும், இயற்கையின் அற்புதங்களை அனுபவித்தும் பேராற்றலுடன் நுண்ணறிவு கொண்டும் வாழ்ந்த வாழ்வியலையும் அவனை வீழ்த்த பேரரசர்கள் செய்த போரினையும் கூறுவதே இந்நாவல்.

இது விகடனில் ஒவ்வொரு வாரமும் தொடர் கதையாக வெளிவந்தமையால் புத்தக வடிவில் படிக்கும் போது ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்புடனும் எதிர்பார்ப்புடனும் நகர்கிறது. 

வீரயுக நாயகன் வேள்பாரி

இதில் நீலன், பழையன், எவ்வி, செம்பன், உதிரம், மயிலா, ஏழிலை பாலை, சிலாக்கொடி, அறுபதாங்கோழி, காக்காவிரிச்சி   என  ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும், தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் ஆசிரியர்  சு.வெங்கடேசன் வைத்துள்ள பெயரும், அதற்கு அவர் தரும் விளக்கமும் தகலை தருவதுடன் ரசிக்க வைக்கிறது. இக்கதையில் தோன்றும் சிறுவனில் தொடங்கி  வயதானவர் வரை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவத்தையும் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளையும் தந்து கதையாசிரியர் கதாபாத்திரங்களுடன் என்னை ஒன்ற வைத்து விட்டார். 

  வெற்றிலைக்கு சொல்லப்படும் வரலாறு, பனை குறித்த தகவல்கள், தர்ப்பை புல் நாக்கத்தறுத்தான் புல்லாக மாறியது என கதையுடன் ஓன்றி ஆங்காங்கே பல புதிய தகவல்களை ஏற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார். காட்டில் உள்ள புல், செடி, கொடி, மரம், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், பாறை, நதி, மணல் என ஒவ்வொன்றிற்கும் கதாபாத்திரங்களின் வழியே பிரமிக்க வைக்கும் தகவல்களை வழங்கியுள்ளார்.

செடியின் கணுக்களில் உள்ள கணிதத்தை கூறும் வரிகளை வாசிக்கும் போது சில நிமிடங்கள் வாசிப்பை நிறுத்தி நானும் கணக்கிட்டு பார்த்தேன் என்றால் அது ஆசிரியருக்கு கிடைத்த வெற்றித் தானே. இதுபோல் நாவல் பழங்களில் உள்ள வகைகளுக்கு ஏற்ற சுவை, கள்ளின் தன்மைக்கு ஏற்ப உண்ண வேண்டிய கறியை கூறும் வரிகள் ஆசிரியரின் ரசனையை வெளிக்காட்டுகிறது.

வீரயுக நாயகன் வேள்பாரி

இந்நாவலில் வரும் ஒவ்வொரு காதல் ஜோடிக்கும் இடையே உள்ள உறவை ரசனை மிகுந்த வார்த்தைகளால் உணர வைக்கிறார். முருகன்-வள்ளி காதலை புதிய கோணத்தில் சொன்னது ரசிக்க வைக்கிறது. குலம் விட்டு குலம் காதலித்து கூடினால் தானே புதுமை தோன்றும் என்ற கருத்தை இன்று அறுவாக்காள் தூக்குபவர்களிடம் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.

கொற்றவை கூத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குலத்தின் கதைகளும் ஆழமான எழுத்துக்களின் வழியே சொல்லப்பட்டுள்ளதால் மெய்சிலிர்க்க வைத்தன. என்னை மிகவும் பாதித்த காட்சிகள் என்றால் கொற்றவை கூத்து களம் தான். பழங்காலத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தலைமை பதவிகள், பெண்களின் திறமைகள், அவர்களின் அறிவு கூர்மை என அனைத்தையும் கதையின் போக்கில் நாவல் வெளிப்படுத்துகிறது. வாணிபத்தை பற்றி எவ்விதமான கருத்தை பாரி கொண்டிருந்தான் என்பதை அறிந்து பெருமை அடைந்தேன். 

முன்னரே ஒரு கதாபாத்திரத்தையோ அல்லது ஒரு பொருளையோ அறிமுகப்படுத்திவிட்டு கதை ஓட்டத்தில் நாம் அதை மறக்கும் போது அதனை விவரிக்கும் விதத்தில் ஆசிரியரின் எழுத்து முறை ரசிக்க வைத்தது. பாரியின் கதைக்குள் பல கிளை கதைகளை பொருந்த கூறிய விதமும், காட்சிகளின் விவரிப்பும் விறுவிறுப்பை குறைவில்லாமல் தந்தன.

இந்நாவலில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் நீலனும், சூளிவேலனும் தான். ஒருவர் மீது நீலன் வைத்த நம்பிக்கையும் அவரை அவன் பார்த்து கொண்ட விதமும், அவனுள் இருக்கும் வலிகளும், பாரியின் மீது அவன் வைத்த மரியாதையும் என அந்த கதாபாத்திரமே அழகுதான். அதே போல் பாரி இவ்வளவு பெரிய வீரனாக மாறுவதற்கு ஓர் காரணம் சூளிவேலனும் தான். அவர் சிறிய அளவே கதைக்குள் வந்தாலும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். இதுபோல் எல்லா கதாபாத்திரங்களும் தனித்தன்மையுடன் இருப்பதை சொல்லிக்கொள்கிறேன். முக்கியமாக அங்கவையின் கதாபாத்திர அமைப்பு தனித்துவம் மிக்கது. 

இந்த நாவலில் தோழனின் செயல்களும், குலத்தின் மூத்த குடியோனின் அனுபவங்களும், தாய்மையின் உணர்வும், தகப்பனின் மனநிலையும், காதலின் தவிப்பும் என மக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் நிறைந்து மனதை நிறைவு செய்கின்றன.

பாரியின்  பண்பு நலன்கள் மட்டுமின்றி அங்கு வசிப்பவர்களின் பண்புகளும் விவரிக்கப்பட்டுள்ள இக்கதையில், பாரி எப்போதுதான் வாள் ஏந்துவான் என காத்திருந்த எனக்கு காலம்பனும் பாரியும் போர் புரியும் காட்சிகள் வித்தியாசமாய் தெரிந்தன. முக்கியமாக எழுத்துக்களால் நீளும் கதைக்கு நாம் கற்பனையாக காட்சிகளை மனதிற்குள் அடுக்கி வைக்கும் போது, அதற்கு உதவும் விதமாய் ஓவியர் மணியம் செல்வம் தன் திறமை வெளிப்படுவதும் அழகுதான். 

தமிழகத்தில் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, கடையெழு வள்ளல்களின் ஒருவன் பாரி என்று மட்டுமே பாரியை பற்றி அறிந்திருந்த எனக்கு, இந்நாவலின் வழியே பாரி என்னும் ரசனையுள்ள நுட்பமான அறிவு உடையவன் என்றும், தன்னுடன் இருப்பவர்கள் எல்லோரையும் தன்னை ரசிக்க வைக்கும் குணங்கள் கொண்டவன் என்றும் அறிந்து கொண்டேன்.

இந்நாவலை வாசிக்க தொடங்கிய போது உண்மையில் கபிலனின் மனநிலையிலேயே நானும்  பறங்கி‌ மலைக்கு பயணித்தேன். பயணித்த நாட்களில் என் தூக்கத்தை கெடுத்து, ஏங்க வைத்து, சிரிப்பை கொடுத்து, அழுகையை வர வைத்து பல உணர்வு பூர்வமான அனுபவங்களை  இந்நாவல் கொடுத்துள்ளது. நிச்சயம் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த நாவல் வழியாக பறங்கி மலைக்கு பயணிப்பேன். 

இக்கதையில் வரும் காட்சிகளில் எதுவெல்லாம் உண்மை, கற்பனை என பிரிக்க முடியாமல் குழம்பிய நான் அனைத்துமே உண்மையென நம்பி என் மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

அரச மரத்தடி! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அன்பும் பிரம்மிப்பும்! - ஒரு மாபெரும் காவியம் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

முகம் தெரியாத நண்பன் தந்த வாழ்வு - மறுபிறவி தந்த ஆனந்த விகடன்! | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என்னை பட்டதாரி ஆக்கிய விகடன்! - என் வாழ்க்கையை மாற்றிய ஒரு மணிஆர்டர் | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

காலா பாணி முதல் டிராகுலா வரை: Vikatan Playயின் ஜூலை மாத Top 5 Audio Books

தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தையும் சாத்தியமாக்கி உள்ள இந்தக் காலகட்டத்தில், சர்வதேச அளவில் ஆடியோ புக்ஸ் கேட்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. காலை நடைப்பயிற்சி தொடங்கி அலுவலுக்காகப் பயணம் செய்யும் நேரம் வ... மேலும் பார்க்க

சினிமா மீது காதல் கொண்டவர்களின் காதல் குபிட் ஆனந்த விகடன்! | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க