செய்திகள் :

Coolie: `கூலி டைம் டிராவல் படமா?’ - லோகேஷ் கனகராஜ் கொடுத்த சப்ரைஸ் பதில் என்ன?

post image

'கூலி' படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், படத்தின் இறுதிகட்டப் பணிகளிலும் ப்ரோமோஷன் பணிகளிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

பேட்டிகள், இசை வெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு என லோகேஷ் பேசும் பல விஷயங்களும் இணையத்தில் கன்டென்ட்களாக வைரலாகி வருகின்றன.

கடந்த 2-ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருந்தது.

Coolie - Rajini Speech
Coolie - Rajini Speech

டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, திரைப்படம் குறித்த பல்வேறு ஊகங்கள் இருந்து வருகின்றன.

அதில், 'கூலி' ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம், இப்படம் டைம் டிராவலை மையப்படுத்தியது என சமூக வலைதளப் பக்கங்களில் பேசி வருகின்றனர்.

இதற்கு லோகேஷ் கனகராஜ் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 'கூலி' திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்வில் பதிலளித்திருக்கிறார்.

நானும் ஆவலாக இருக்கிறேன்

லோகேஷ் கனகராஜ் பேசும்போது, "நான் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் வரும் பதிவுகளை வாசிப்பேன்.

மக்கள் சொல்லும் விஷயங்கள் என்னையும் சர்ப்ரைஸ் செய்தன. நானும் இப்போதுதான் சத்யராஜ் சாரிடம், 'அனைவரும் இதை சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம், டைம் டிராவல் திரைப்படம் எனச் சொல்கிறார்கள்' எனப் பேசிக் கொண்டிருந்தேன்.

Coolie - Lokesh Kanagaraj
Coolie - Lokesh Kanagaraj

ஆனால், படத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்படுவதைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்," என்றவர், "நான் கமல் சாருடனும் ரஜினி சாருடனும் வேலை பார்த்துவிட்டேன்.

இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவருமே லெஜெண்ட்தான். இரண்டு பேருமே ஓஜிதான்! சொல்லப்போனால், இருவருமே என்னுடைய கண்கள்," எனப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`நமக்கே சில படங்கள் ஓடாதென தெரியும்போது, அதை செய்தால் தவறாகிடும்..!' - அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் 'கூலி' படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகி... மேலும் பார்க்க

Anirudh: " பாடலுக்காக சாட் ஜி.பி.டி-யின் உதவியை நாடினேன்!" - அனிருத் ஓப்பன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் 'கூலி' படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகி... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "இந்திய மக்கள் தொகைக்கு நான் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன்!" - எஸ்.கே கலகல!

சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி ரிலீஸாகிறது. இதனைத் தாண்டி, தற்போது 'பராசக்தி' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டின் நாஸ்காம் கூட்ட... மேலும் பார்க்க

Ajith: `கரியர் மட்டும் இல்லாம பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கீங்க'- அஜித் குறித்து நெகிழும் ஷாலினி

அஜித் திரைத்துறையில் 33 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அவரின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அஜித் தன் திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். இது குறித்து சில தினங்க... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "என்னோட இந்தப் படத்தை பார்ட் 2 எடுக்கலாம்; ஆனால்" - சிவகார்த்திகேயன் கலகல பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என இரண்டு படங்களின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்நிலையில் 'Nasscom' என்ற சேனலுக்கு நேர்காணல் கொடுத்திருக... மேலும் பார்க்க

அகரம் அறக்கட்டளை: "இந்த முயற்சியில் உங்களுக்குச் சேவையாற்றத் தயார்" - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் 20வது ஆண்டுவிழாவில் மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று (ஆகஸ்ட் 3) கலந்துகொண்டார்.அந்த நிகழ்வையும் சூர்யாவை வாழ்த்தும் வகையில், "நாம் இருவரும் நே... மேலும் பார்க்க