’உலகின் சிறந்த கணவன்’ - இந்தியக் காதலனை கரம்பிடித்த ரஷ்ய பெண் சொல்லும் 3 காரணங்...
Ajith: `கரியர் மட்டும் இல்லாம பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கீங்க'- அஜித் குறித்து நெகிழும் ஷாலினி
அஜித் திரைத்துறையில் 33 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அவரின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அஜித் தன் திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். இது குறித்து சில தினங்களுக்கு முன் அஜித், " சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன்.

ஆனால், இதனைக் கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன்" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது அவரின் மனைவி ஷாலினி அஜித் 33 ஆண்டுகள் கடந்ததைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, " நீங்கள் உங்கள் கரியரை மட்டும் வளர்த்துக்கொள்ளவில்லை. பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறீர்கள், உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...