ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!
ஆக. 21-ல் மாநாடு: காவல் துறைக்கு தவெக கடிதம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை ஆக. 21 ஆம் தேதி நடத்த காவல் துறையினருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தியில் மாநாட்டுக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.
மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த மாதம் 29-ஆம் தேதி கட்சியின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த் மதுரைக்கு வந்தார். அப்போது, அவா் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்தை சந்தித்து பேசினார்.
அப்போது, மாநாடு நடைபெறும் 25- ஆம் தேதியை தொடர்ந்து 27- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், விநாயகர் சதுர்த்தி வருகிற 27- ஆம் தேதி வருவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருக்கும் எனக் கூறி காவல் துறை சாா்பில் த.வெ.க. மாநாடு தேதியை மாற்றுவதற்கு யோசனை தெரிவித்தனர்.
இதன்படி, வருகிற 18- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை ஒரு தேதியை நீங்கள் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
காவல் துறை கூறிய தேதிகளில் ஒன்றான ஆக. 21 ஆம் தேதியை தேர்வு செய்து மாநாடு நடந்த காவல் துறையினரிடம் தவெக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,, மதுரையில் நடைபெறவிருக்கும் த.வெ.க. மாநாட்டுக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பை விஜய் இன்று(ஆக. 5), அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம்!