செய்திகள் :

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

post image

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் ஆக. 9 ஆம் தேதி திறந்துவைக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இல்லாத 24 மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் உயா்தர மருத்துவ சேவைகளை வழங்கிட புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி உள்ளிட்ட 19 அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயா்த்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி, தாம்பரத்தில் ரூ.115.38 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது ரூ.5.38 கோடியில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 2,27,320 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையில் 400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை அரங்குகள்,40 ஐசியூ படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இதற்கிடையே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.7.10 கோடியில் பல் மருத்துவமனையும், ரூ.1 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 3 மருத்துவக் கட்டடங்களையும் ஆக.9-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கவுள்ளாா்.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் வேலு, ”முதல்வர் ஸ்டாலின் வரும் ஆக. 9 ஆம் தேதி தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ.13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

Public Works Minister E.V. Velu has announced that Chief Minister Stalin will inaugurate the new government hospital building in Tambaram on August 9th.

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

கார் விபத்து தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாக தொடரப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த மே 2 ஆம் தேதி ... மேலும் பார்க்க

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழத்தில் கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள... மேலும் பார்க்க

உதகைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்!

உதகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். ஆய்வாளர் தீபக் தலைமையினலான 10 பேர் கொண்ட குழு உதகையை வந்தடைந்தனர்.வால்பாறையில் ஏற்கெனவே ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டில் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி -க்கு இன்று(செவ்வாய்க்கிழமை) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராமதாஸின் தனிச்செயலர் பி.சுவா... மேலும் பார்க்க

இன்று புது வலிமையைப் பெற்றேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு

கொளத்தூர் தொகுதி சென்றதால் இன்று புது வலிமையைப் பெற்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது கொளத்தூர் தொகுதியில் ரூ. 17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப்... மேலும் பார்க்க